யமுனா செய்த வேலையால் கொந்தளித்த நிவின், வெண்ணிலாவை சந்தித்த காவிரி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் யமுனா, நான்தான் விஜயை போலீசிடம் மாட்டி விட்டேன் என்று சொன்னவுடன் கங்கா- காவிரி இருவருமே ஷாக் ஆனார்கள். எதற்காக இப்படி செய்தாய் என்று கங்கா கேட்டார். அதற்கு யமுனா, நிவின்-காவிரி இருவருமே காதலை தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். என் வாழ்க்கை பறிப்போகிறது. அதனால் தான் நான் இப்படி செய்தேன். காவிரி, விஜய் உடன் வாழ வேண்டியது என்றால் நிவனுடன் எதுக்கு பேசனும். இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுத்துகிறார்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட காவிரி, யமுனாவை அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் கங்கா, நீ பேசுவது சரியே இல்லை. காவிரியின் கேரக்டரை பற்றி நீ பேசுவதற்கு தகுதியே இல்லை என்று திட்டி விட்டு சென்றார்.
காவிரி போலீஸ் ஸ்டேஷன் போனார். ஆனால், விஜய்யை நேரடியாகவே சிறையில் அடைத்து விட்டார்கள். இதை அறிந்து நிவின்- குமரன் இருவருமே சிறைக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய்யை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. பின் தாத்தா- பாட்டி இருவருமே வக்கீலோடு போலீசை சந்தித்தார்கள். ஆனால், அவர்களுமே விஜய்யை சந்திக்க அனுமதிக்கவில்லை. பின் அங்கு காவிரியை பார்த்த பாட்டி கோபத்தில், உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்றும் திட்டி இருந்தார். காவிரியால் எதுவுமே பேச முடியவில்லை. விஜயின் நிலைமை நினைத்து காவிரி ரொம்பவே அழுது கொண்டிருந்தார். பின் விஜயை பார்க்க வேண்டும் என்று போலீஸிடம் கெஞ்சி கதறி அழுதார் காவிரி.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் ஜெயிலில் விஜயை பார்க்க காவிரி சென்றார். விஜய், காவேரியை பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால் காவேரி, என்னால் தான் உங்களுக்கு இந்த நிலைமை. நீங்கள் என்னை திருமணம் செய்திருக்க கூடாது. என்னுடைய நேரம் தான் உங்களை எல்லாம் இப்படி செய்கிறது என்று ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். அதற்கு விஜய், நீ கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதே. வெளியில் எடுப்பதற்கான வேலையை மட்டும் பார்க்கலாம் என்று சொன்னார்.
இன்னொரு பக்கம் ராகினியை சந்தித்து நிவின் பேசி இருந்தார். நிவின் ரொம்ப அமைதியாகவும் அன்பாகவும் பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
கடைசியில் பசுபதி பத்தி பேசிய உடன் ராகினி புரிந்து கொண்டு அதற்கான பதிலை சொல்லாமல் என்னென்னவோ பேசி சமாளித்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி, யமுனாவை பார்த்து எதற்கு நீ இங்கு இருக்கிறாய்? வீட்டிற்கு கிளம்பு என்று சண்டை போட்டார். அந்த சமயம் கங்கா, மிஷின் விஷயமாக பேசப்போனாயே என்ன நடந்தது என்று கேட்க, காவிரியும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார். இதை எல்லாம் பார்த்து காவேரி அம்மாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் கங்காவிடம் காவிரி, ஜெயிலில் நடந்ததை பற்றி பேசி எமோஷனல் ஆக பேசி அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, போலீஸிடம் ரொம்ப கெஞ்சி கேட்டு கதறிய பிறகுதான் என்னை விஜய்யை பார்க்க விட்டார்கள். அவரை பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ரொம்பவே அழுகிறார். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் குமரன் இடம் கங்கா, காவிரியை நினைத்தால் எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. யமுனா தான் விஜயை போலீஸிடம் மாட்டி விட்டாள். காவிரி- நிவினை பற்றி ரொம்ப தப்பாக பேசுகிறார் என்று சொல்கிறார். அதற்கு குமரன், என்னிடமும் ஏற்கனவே இப்படி யமுனா சொல்லி இருக்கிறார். ஏன் இப்படி பண்ணுகிறாள் என்று புரியவில்லை. எப்படியாவது விஜய்யை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் நிவின், ராகினி இடம் பசுபதியை பற்றி பொறுமையாக பேசி விசாரிக்கிறார். ஆனால், ராகினி சுதாரித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிடுகிறார். அதற்குப்பின் நிவினை சந்தித்த குமரன், விஜயின் நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நிவின், நானும் பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது
குமரன், யமுனா தான் விஜய்யை போலீஸில் சிக்க வைத்திருக்கிறார் என்று நடந்ததை சொன்னவுடன் நிவினுக்கு பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவை சந்திக்க காவிரி, ஹாஸ்பிடல் போயிருக்கிறார். அங்கிருந்த நர்ஸ், வெண்ணிலாவிடம் மாற்றம் தெரிகிறது என்று சொன்னதால் காவிரி வெண்ணிலாவிடம் பேசுகிறார். கடைசியில் வீட்டிற்கு வந்த நிவின், எதற்காக விஜய்யை போலீசில் மாட்டி விட்டார் என்று கேட்க, யமுனா மோசமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.