காவிரி-விஜயை சேர்த்து வைக்க போராடும் சாரதா, அடுத்து என்ன? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 2/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்முவை அழைத்துக் கொண்டு விஜயின் வீட்டிற்கு சென்றார். இதைப் பற்றி சாரதா, விஜய்க்கு போன் சொல்லி விட்டார். பின் விஜயின் வீட்டிற்கு சென்ற காவேரி, உங்கள் மனதில் என்ன தைரியம் இருக்கிறது? யாரை கேட்டு பெண் கேட்க வந்தீர்கள்? உங்களுக்கு இடம் கொடுத்தது என் தப்புதான் என்று விஜய்யின் தாத்தா, சித்தப்பா எல்லோரையுமே பேசி இருந்தார். யாராலும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. காவிரி, தன் மனதில் இருந்த ஆத்திரத்தை எல்லாம் கொட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

அதற்குப்பின் விஜய், காவிரி பின்னாடியே தொடர்ந்து வந்து தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் யாரிடமும் பேச சொல்லவில்லை. அவர்களாகவே இதை செய்து விட்டார்கள் என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஒரு கட்டத்தில் காவிரி, விஜயின் நிலைமையை புரிந்து கொண்டார். இன்னொரு பக்கம் சாரதா, யமுனா- கங்கா இருவருக்கும் போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த காவேரி, இனிமேல் இந்த விஷயம் பற்றி யாரும் பேசாதீர்கள் என்றார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

மகாநதி:

காவேரி தூங்காமல் போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய், மன்னிப்பு கேட்டு மெசேஜ் போட்டார். காவிரி அதை பார்த்தார். பின் விஜய், வாய்ஸ் நோட்டில் என் குழந்தை யாரிடமும் இந்த அளவுக்கு பாசமாக இல்லை. உங்களிடம் தான் பாசமாக இருந்தார். அதற்காகத்தான் உங்கள் வீட்டிற்கு நாங்கள் வருகிறோம். என் மனைவி இறந்து போன விஷயம் என் மகளுக்கு தெரியாது. நீங்கள் சொல்ல வேண்டாம். அவள் உங்கள் மீது ரொம்ப பிரியமாக இருந்தார். அதற்காக நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்.

சீரியல் ட்ராக்:

எங்கள் வீட்டில் செய்ததது தவறு என்றெல்லாம் சொன்னார். இதை பார்த்து காவிரி மனதுக்குள் சிரித்துக் கொண்டார். ஆனால், எந்த பதிலும் சொல்லவில்லை. இது எல்லாம் சாரதா பார்த்து விட்டார். பின் மறுநாள் காலையில் சாரதா, அம்முவிற்காக சமைத்து வைத்திருந்தார். காவிரி வேண்டாம் என்றார். ஆனால், சாரதா கேட்கவில்லை. அம்முவிடம் கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். காவிரியும் குழந்தைக்காக சாப்பாடு எடுத்து கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை பார்ப்பதற்காக அழகாக தயாராகி சென்றார்.

https://www.youtube.com/watch?v=gVTOjfefVRo

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் விஜய், என்னுடைய மெசேஜெல்லாம் காவேரி பார்த்தாளா? என்று கேட்கிறார். சாரதா, அதை எல்லாம் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். நான் அதை கவனித்தேன் என்கிறார். அதற்குப் பின் காவிரி, நான் உங்களை மன்னிக்கிறேன் என்று சொல்கிறார். பின் காவிரி-விஜய் இருவரும் ஓன்றாக பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது சாரதா, என் மகளையும் மருமகனையும் சேர்த்து வைக்க என்னென்ன வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்புகிறார்.

behindtalkies AMP · Quick view
View full