வீட்டை விட்டு வெளியே போகும் காவிரி-விஜய், யமுனா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிவின் அம்மா, எதற்காக இப்படி கஷ்டப்படுகிறாய். உனக்கு பணத்தை நான் தருகிறேன். நீ யமுனாவிற்கு விவாகரத்து கொடுத்துவிடு. இந்த சொத்து முழுவதும் நீதான் அனுபவிக்கணும். உனக்கு பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்றெல்லாம் சொன்னார். இதைக்கேட்டு யமுனாவிற்கு பயங்கர கோபம் தான் வந்தார். நிவின், யமுனா நான் அவளுக்கு கிடைப்பேனா? இல்லையா? என்ற பதட்டத்தில் தான் இருக்கிறார்.
யமுனாவிற்கு என்னை ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது. ஆனால், என்னால் தான் அவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவளை விவாகரத்து செய்யணும் என்று எனக்கு எண்ணம் வந்ததில்லை. தேவையில்லாமல் இதைப் பற்றி பேசாதீர்கள் என்றார். இதையெல்லாம் கேட்ட யமுனா ரொம்பவே எமோஷனலாக அழுதார். அதற்குப்பின் யமுனா, கொடைக்கானல் வீட்டை விற்கும் விஷயமாக பேசுவதற்கு தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது கங்கா- யமுனா இருவருமே சேர்ந்து தன்னுடைய அம்மாவிடம் வீட்டை விற்பதை பற்றி பேசினார்கள்.
மகாநதி:
அப்போது கங்கா, காவிரிக்கு பணக்கார வாழ்க்கை கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் தான் கஷ்டப்படுகிறோம். வீட்டை விற்று எங்களுக்கான செட்டில்மெண்ட் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் சொல்வதால் சாரதாவுமே மனம் மாறினார். இருந்தாலும் காவிரியிடம் கேட்கணும் என்கிறார். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த காவிரி, நான் விஜயுடன் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு போகலாம் இருக்கிறேன் என்றார். இதை கேட்டு சாரதாவும் சம்மதம் சொன்னார். தயவு செய்து வெளியே போ என்று சொல்லாமல் கங்கா சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, பாட்டியின் உடல்நிலையும் நினைத்து பாருங்கள். தயவு செய்து வீட்டிற்கே போகலாம் என்று எவ்வளவோ பேசுகிறார். விஜய் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் யமுனா, எனக்காக நீங்கள் உங்க அம்மாவிடம் சப்போர்ட் செய்து பேசியதற்கு நன்றி. நான் என்னுடைய வீட்டை விற்று வரும் பங்கில் உங்களுக்கு தருகிறேன். அதை வைத்து உங்கள் தொழிலை தொடங்குங்கள் என்று சொல்கிறார். நிவின், நீ எல்லாரை பற்றியும் யோசிப்பதை நிறுத்திவிட்டு. உன்னுடைய கேரியரில் மட்டும் கவனம் செலுத்து என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் துணிகளை எல்லாம் பேக் செய்துவிட்டு விஜய்- காவிரி இருவருமே வீட்டை விட்டு கிளம்ப தயாராக இருக்கிறார்கள். சாரதா, பாட்டி எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனம் இல்லாமல் அங்கிருந்து விஜய்-காவேரி கிளம்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கடுப்பாகிறது. ஒரு வழியாக காவிரி- விஜய் இருவருமே தங்களுடைய வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். தாத்தா- பாட்டி இருவருமே காவிரி, விஜயை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது