விஜய் ஆபிசில் ப்ரச்சனை செய்யும் கஸ்டமர்ஸ், காவேரி சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 21/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா செய்த சூழ்ச்சியால் வீட்டில் பெரிய கலவரம் நடந்திருப்பது விஜய்க்கு தெரிந்து விடுகிறது. பின் விஜய், கிருஷ்ணா தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை. தேவையில்லாமல் பிரச்சினை செய்ய வேண்டாம். இருந்தாலுமே முத்து மலர் குடும்பம் கெஸ்ட் ஹவுஸில் இருக்கட்டும். நீங்கள் இந்த பிரச்சினையை விடுங்கள் என்று எல்லோரையும் சமாதானம் செய்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ஆபீஸில் கன்ஸ்டிரக்ஷன் வேலை முழுவதுமாக முடியாததால் கஸ்டமர் எல்லோருமே பிரச்சினை செய்து கொண்டிருந்தார்கள். இதை விஜய் இடம் சொல்ல வேண்டும் என்று ஆபீஸில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

அந்த சமயம் வந்த சித்தப்பா, இதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். விஜயிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று மீண்டும் சதி செய்ய திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் குமரனிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் விஜய்-நிவின் இருவருமே கவலைப்பட்டார்கள். அதற்கு நிவின், நான் உடனே அங்கு சென்று என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து சொல்கிறேன். நீங்கள் இங்கிருக்கும் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். விஜய்யும் நிவின் சொல்வதை ஏற்றுக் கொண்டார்.

மகாநதி:

ஏழாவது மாதம் செக்கப்பிற்காக விஜய்- காவேரி இருவரும் ஹாஸ்பிடலுக்கு செல்ல தயாராகி கிளம்பினார்கள். அப்போது பாட்டி, கங்காவும் உங்களுடன் வருகிறாரா? பிரசவத்திற்கு அவன் அப்பா வருவானா? நீதான் எல்லாமே செய்யணுமா? என்றார். இதை கேட்டு சாரதா ரொம்பவே வருத்தப்பட்டார். பின் விஜய், சாரதாவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். முதலில் காவிரிக்கு செக்கப் செய்தார்கள். குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் கங்காவிற்கு செக் அப் செய்தார்கள். ஆனால், குமரன் தன்னுடன் இல்லாதது நினைத்து கங்கா ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்கால் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வந்தார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொன்னார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆனார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=z4i0xWvIz6Y

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் வேலையை முடித்து தராததால் மக்கள் எல்லோருமே விஜய் ஆபீசில் பயங்கர ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் காவிரி பயங்கரமாக கத்தி பேசுகிறார். இதனால் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டு விடுகிறது. உடனே அங்கிருந்த ஒருவர் எல்லோரையும் சமாதானம் செய்து உட்கார வைக்கிறார். பின் காவிரி, நாங்கள் எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறோம். தயவு செய்து சொல்வதை கேளுங்கள். உங்களுடைய வேலையை முடித்து தருகிறோம் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு அங்கு இருப்பவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full