காவிரிக்கு வந்து போகும் கடந்த கால நினைவுகள், விஜயை பற்றி அறிவாரா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் டிரைவர், விஜய் என்ற பெயரை சொல்லி பேசிக் கொண்டிருந்தார். விஜய் என்ற பெயரை கேட்ட உடனே காவிரிக்கு ஏதேதோ ஞாபகங்கள் வருகிறது. காவிரி ஒரு நிமிடம் அமைதியாகவே நின்று விட்டார். பின் தன் அம்மாவிடம் காவிரி, விஜய்ன்னு எனக்கு யாராவது தெரியுமா? அவரை நான் பார்த்திருக்கிறேனா? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டார். சாரதாவல் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி, அந்த பெயரை கேட்டால் எனக்கு என்னென்னவோ நினைவுகள் வருகிறது என்றார். இருந்தாலும் சாரதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
காவேரி- சாரதா இருவரும் காஞ்சிபுரத்திற்கு வந்து விட்டார்கள். பின் தங்களுடைய புது வீட்டிற்கும் சென்று விட்டார்கள். காவிரி பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிறது என்று தயாரானார். இன்னொரு பக்கம் விஜய் தன்னுடைய மகளை தயார் செய்து பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தார். விஜய்- காவிரி இருவரும் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை. பின் காவிரி, தன் குழந்தை தான் என்று தெரியாமல் அம்முவிடம் பேசி இருந்தார். பின் விஜய் அழைத்தால் அம்மு சென்று விட்டார்.
மகாநதி:
விஜய் தன்னுடைய மகளை பள்ளியில் விட்டு சென்று விட்டார். அம்மு அழுது கொண்டே இருந்தார். அப்போது வந்த காவேரி, அம்முவிற்கு ஆறுதல் சொல்லி நான்தான் உனக்கு கிளாஸ் டீச்சர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இன்னொரு பக்கம் விஜய், தன் மகள் எப்படி இருப்பாள் என்று கவலையில் இருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த காவிரி, அம்முவுடன் பேசியதை பற்றி எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்தார். அப்போது அம்மு, நீங்கள் போன பிறகு நான் அழுது கொண்டு இருந்தேன். கிளாஸ் மிஸ் தான் என்னிடம் அன்பாக பேசி நடந்து கொண்டார் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு விஜய்க்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் காவிரி, எனக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு பெரிய வீடு, சில நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு ஹீரோ இருக்கிறார். ஆனால், அவர்கள் யார் என்று தான் தெரியவில்லை. அடிக்கடி அந்த மாதிரி கனவு வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் விஜய், குழந்தைக்கு தங்களுடைய காதல் கதையை சொல்லி தூங்க வைக்கிறார். மறுநாள் பள்ளிக்கு விஜய், தன் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போது காவிரியும் வருகிறார். விஜய் பார்ப்பதற்குள் காவிரி உள்ளே சென்று விடுகிறார். பின் விஜய், உன்னுடைய கிளாஸ் டீச்சரை பிறகு சந்திக்கிறேன். பத்திரமாக போயிட்டு வா என்று விஜய் அனுப்பி வைக்கிறார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்மு, காவிரிக்கு விஷ் செய்து இருவருமே கிளாஸ் ரூமிற்கு போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது