சூழ்ச்சியை முறியடித்து தன் கணவனை மீட்க போராடும் காவிரி, விஜயின் சித்தி உண்மை சொல்வாரா? மகாநதி

By subhashini · 25/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலா, உன் சித்தப்பா எங்களிடமிருந்த ஃபோன் எல்லாம் பிடுங்கி விட்டார். நான் என்ன செய்வது என்றெல்லாம் அழுது புலம்பி இருந்தார். விஜயா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் பேசி இருக்கும் வீடியோவை பார்த்த காவிரியின் குடும்பத்தினர் ஷாக் ஆனார்கள். பின் வீட்டில் உள்ள காவிரியின் பாட்டி, அத்தை இருவருமே காவிரி- விஜய் சேர்த்து வைப்பதை பற்றி பேசி இருந்தார்கள். அவருடைய அம்மாவால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காவிரியும் அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆனார்.

விஜய் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீஸ், உங்களுக்கு ஏதாவது பணம் வேணும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று சொன்னார். இதனால் வெண்ணிலா கோபப்பட்டு போலீஸ் இடம் சண்டைக்கு போனார். இதுதான் சந்தர்ப்பம் என்று பசுபதி, விஜயின் சித்தப்பாவை உள்ளே வர சொன்னார். இன்னொரு பக்கம் காவிரியை சந்திக்க அவருடைய மாமா குமரன் வந்திருந்தார். அப்போது அவர், உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று சொன்னார். காவிரி தேவையில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.

மகாநதி சீரியல்:

இன்னொரு பக்கம் வீட்டின் ஹவுஸ் ஓனர் காவிரியின் அம்மாவிடம் விஜய் -வெண்ணிலா விவகாரத்தை பற்றி பேசினார். அவர்களுமே, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நீங்க எது பேசுவதாக இருந்தாலும் விஜய்யிடம் பேசுங்கள் என்று சொல்லி அனுப்பி இருந்தார். கடைசியில் கோவிலில் விஜயின் சித்தப்பா, வெண்ணிலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டை விட்டு துரத்தியது மட்டுமில்லாமல் அவர்களை ஆக்சிடண்ட் செய்ய சொன்னதும் விஜய் தான். அவர் சொல்லி தான் நான் செய்தேன் என்று ஒரு பொய்யான குற்றசாட்டை வைத்தார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆனார். விஜய் கோபப்பட்டு அவர் சித்தப்பாவிடம் சண்டைக்கு போனார். உடனே போலீஸ் இருவரையும் கைது செய்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் போலீஸ் ஸ்டேஷனில் விஜய் மற்றும் அஜய் அப்பாவின் தரப்பு
நியாயத்தை விசாரித்தார்கள். விஜய், தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தார். அஜய் அப்பா, அவன் சொல்வதெல்லாம் பொய். டிராமா போடுகிறான் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் காவிரி, விஜய் பார்க்க ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது விஜயின் தாத்தாவிற்கு ஃபோன் செய்து நடந்த விபரத்தை சொன்னார் காவிரி. பின் போலீஸ் ஸ்டேஷன் வந்த காவிரி, விஜயை பார்த்து அவருக்கு ஆறுதல் சொன்னார். அப்போது வந்த வெண்ணிலா, நீ எதற்கு விஜயிடம் பேசுகிறாய்? என்று கேட்டார். உடனே காவிரி, விஜயின் மனைவி நான் மட்டும் தான்.

சீரியல் ட்ராக்:

எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. யாருக்காகவும் விஜய் விட்டு தர மாட்டேன் என்று பேசி இருந்தார்.
இதனால் வெண்ணிலா கோபப்பட்டு காவிரியிடம் சண்டைக்கு போனார். பின் காவிரி- வெண்ணிலா இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது வந்த போலீஸ், அவர்களின் சண்டையை நிறுத்தி பஞ்சாயத்து விசாரித்தார். இரு தரப்பிலுமே மாத்தி மாத்தி வாக்குவாதம் செய்தார்கள். உடனே போலீஸ், விஜய் -அஜய் அப்பாவை தவிர எல்லோரையும் வெளியே போக சொல்லி விட்டார். பின் காவிரி வரவில்லை என்று அவருடைய வீட்டில் இருந்து போன் செய்தார்கள். காவிரியும் என்னவோ சொல்லி சமாளித்தார்.

https://www.youtube.com/watch?v=QDx3m_dkfOM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனில் ராகினி, உன் புருஷனை வெளியில் வராத மாதிரி தொக்காக உள்ளே வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட காவிரி, ராகினியை அடித்து விட்டு என்னையும் என் புருஷனையும் பிரிக்க முடியாது. நான் அவரை வெளியே எடுப்பேன் என்று சவால் விடுகிறார். அதற்குப்பின் தாத்தாவிடம் காவிரி, விஜயின் சிட்டியை சந்தித்து பேச வேண்டும் என்று சொல்கிறார். பின் தாத்தா-காவிரி இருவருமே விஜயின் சித்தி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது தாத்தா, விஜய் ஜெயில் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். ஆனால், அவர் அமைதியாகவே இருக்கிறார். உடனே காவிரி, விஜய்க்காக நீங்கள் உண்மையை சொல்ல மாட்டீர்களா? தயவு செய்து விஜயை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full