கிருஷ்ணாவை வேலை செய்யவிடாமல் ப்ரச்சனை செய்யும் சித்தப்பா, விஜய்யின் குறும்படம் - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர், கிருஷ்ணா எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார். பின் காவிரி, நர்மதாவை வரவைத்து நடந்ததை விசாரித்தார். அப்போது கிருஷ்ணா மீது தவறில்லை என்பதை விஜய் புரிந்து கொண்டார். மறுநாள் காலையில் வாக்கிங் செல்லும் போது கிருஷ்ணாவை சந்தித்து விஜய், காவிரி இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது விஜய், கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணாவும் எமோஷனலாக பேசி இருந்தார்.
விஜய், என்னுடைய கம்பெனியில் இன்ஜினியருக்கு ஆள் தேவைப்படுகிறது. சேர்ந்து கொள்கிறாயா என்று கேட்டார். கிருஷ்ணா, எதையும் யோசிக்காமல் நான் நன்றாக வேலை செய்வேன். எனக்கு சம்மதம் என்று சொல்லி விட்டார். பின் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். அப்போது விஜய், அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொண்டால் உங்களிடம் பிரச்சனை செய்ய மாட்டார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டில் பாட்டிக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போனதால் டாக்டர் வந்திருந்தார்.
மகாநதி:
பின் பாட்டியை செக் செய்த டாக்டர், அவர்கள் கூட இருந்து ஒரு நர்ஸ் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்னார். உடனே விஜய், நர்சை ஏற்பாடு செய்கிறேன் என்றார். அதற்குப்பின் விஜய்-காவிரி இருவரும் சிந்துவை நர்சாக வைப்பதற்கு முடிவு செய்தார்கள். பின் முத்துமலர், சிந்துவை வரவைத்த விஜய், நீ நர்சாக இருந்து பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்பிடலில் எவ்வளவு வாங்கினாயோ அதையே தருகிறேன் என்றார். இதை கேட்டவுடன் எமோஷனலான சிந்து, விஜய் காலில் விழுந்து நன்றி சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிருஷ்ணா, விஜயின் ஆஃபீஸில் வேலைக்கு சேர்கிறார். விஜய் தன்னுடைய ஆபீஸில் எல்லோரிடமும் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைத்து வேலை நடக்கும் இடத்திற்கு போக சொல்கிறார். இது எல்லாம் பார்த்த சித்தப்பா கடுப்பாகி கிருஷ்ணாவை பற்றி தப்பு தப்பாக விஜயிடம் சொல்கிறார். ஆனால், விஜய் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின் கிருஷ்ணா, வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சித்தப்பா அவரை அவமரியாதையாக பேசுவதோடு திட்டிக் கொண்டே இருக்கிறார். கிருஷ்ணாவை வேலையும் செய்ய விடாமல் தடுக்கிறார். ஆனால், கிருஷ்ணா அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சிந்து, விஜயின் பாட்டியை நன்றாக பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். இது எல்லாம் பார்த்து தாத்தா ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் சாரதா காவிரிக்கு வளைகாப்பு நடத்த இருப்பதால் அதற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய நினைக்கிறார். உடனே முத்து மலர், எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் சித்தப்பா, கிருஷ்ணா வேலையே செய்யவில்லை. நடித்துக் கொண்டிருக்கிறார். அவன் உன்னை ஏமாற்ற போகிறான் என்றெல்லாம் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த கிருஷ்ணா, அவர் பார்த்த வேலை எல்லாம் விஜய் இடம் சொல்லிவிட்டு செல்கிறார். பின் விஜய், கிருஷ்ணாவை வேலை செய்யவிடாமல் சித்தப்பா தடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் காண்பிப்பதால் சித்தப்பா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.