வெண்ணிலா மாமா மறைத்த ரகசியத்தை அறிந்த குமரன், காவிரிக்கு தெரிய வருமா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜய்க்கு போன் செய்த காவிரி, ஆபீஸில் தனது எல்லா உரிமை இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். விஜய், இதை சொல்ல தான் இருந்தேன். ஆனால், அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, அப்பளம் பிசினஸ் நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. நான் உடனே உங்களிடம் வந்து விடுவேன். பிசினஸ் செய்ய இடம் இல்லாததை பற்றி விஜயிடம் காவிரி சொன்னார். உடனே விஜய், அந்த ஹவுஸ் ஓனரிடம் ஏற்பாடு செய்து தர சொன்னார்.
அடுத்த நாள் காலையிலேயே ஹவுஸ் ஓனர் மாமி, அப்பளம் போடுவதற்கு எல்லாம் ஏற்பாடும் நான் செய்து தருகிறேன். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று காவேரி அம்மாவிடம் சொன்னார். இதைக் கேட்டு காவிரி குடும்பமே ஷாக் ஆனது. இதெல்லாம் விஜய் தான் செய்தார் என்று காவிரி தெரிந்து கொண்டு சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கங்கா, தன்னுடைய செக்கப்புக்கு ஹாஸ்பிடலுக்கு போனார். உடனே காவிரி, தானும் செக்கப் போவதை நினைத்து பார்த்தார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் காவேரி செக்கப்புகாக ஹாஸ்பிடல் போயிருந்தார். பின் விஜய்க்கு போன் செய்து ஹாஸ்பிடல் வந்திருக்கும் விஷயத்தை காவிரி சொன்னார். இதை கேட்டவுடன் விஜய் ரொம்பவே வருத்தப்பட்டார். காவிரி, நீங்கள் ஹாஸ்பிடல் வர வேண்டாம் என்றார். பின் காவிரி செக்கப்புக்கு உள்ளே போகும்போது விஜய் வந்து விட்டார். பின் இருவரும் ஸ்கேனிங் சென்டருக்கு போனார்கள். ஸ்கேனில் குழந்தையை பார்த்து விஜய் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
நேற்று எபிசோட்:
குழந்தை நன்றாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னதில் காவிரி -விஜய் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்கு பின் காவிரி- விஜய் இருவரும் வெளியே வரும்போது போலீஸ் நின்று கொண்டிருக்கின்றது. இதை பார்த்து இருவரும் ஒளிந்து கொண்டார்கள். பின் விஜய், நான் எப்படியாவது போய் விடுகிறேன். நீ பத்திரமாக காரில் செல் என்று அனுப்பி வைத்தார். காவிரியை பார்த்து போலீஸ், விஜய் இங்குதான் இருக்க வேண்டும் என்று சோதனை செய்தார்கள். பின் வீட்டிற்கு போன காவிரியிடம் கங்காவின் ஸ்கேனிங் ரிபோட்டை காண்பித்தார்கள். அதை பார்த்து காவிரி ரொம்ப சந்தோசப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி, விஜய் ரூமிற்கு சென்று சுத்தம் செய்கிறார். அங்கு விஜயினுடைய துணிகள் எல்லாமே கலைந்து கிடைக்கிறது. விஜயின் சட்டையை வைத்து ரொமான்டிக்காக காவிரி டான்ஸ் ஆடுகிறார். அதற்குப்பின் விஜயினுடைய டைரியை எடுத்து காவிரி படிக்கிறார். அப்போது விஜய்க்கு போன் செய்த காவிரி , டைரி படிக்கும் விஷயத்தை சொன்னவுடன் அவர், வேண்டாம் என்கிறார். ஆனால், காவிரி ஒவ்வொன்றாக படித்து காண்பிக்கிறார். ஆரம்பத்தில் விஜய், காவிரி பற்றி ரொம்ப பாசமாக எழுதி, அதற்குப்பின் முழுக்க முழுக்க தன்னுடைய மகளை பற்றி தான் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் வந்து விஜயிடம் செல்லமாக சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் குமரன் ஹாஸ்பிடலில் துணிகளை கொடுக்க போனார்.
சீரியல் ட்ராக்:
அங்கு பசுபதி, வெண்ணிலாவின் மாமா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒளிந்து நின்று குமரன் பார்க்கிறார். அப்போது வெண்ணிலாவின் மாமா, விஜயின் சொத்து கிடைக்கும். வெண்ணிலா சந்தோசமாக வாழ்வாள் என்று ஆசை காட்டி விஜய்க்கு எதிராக செய்ய சொன்னீர்கள். பின் சண்டையில் வெண்ணிலாவை நீங்களே மாடியில் இருந்து தள்ளிவிட்டு இப்போது அவளே தற்கொலை செய்து கொண்டால் என்று வீண் பழி போட்டு விட்டீர்கள். இதெல்லாம் நியாயமா? என்று கேட்கிறார். உடனே பசுபதி கோவப்பட்டு வழக்கம் போல வெண்ணிலா மாமாவை மிரட்டுகிறார். இதையெல்லாம் கேட்ட குமரன் ஷாக் ஆகி மொபைலில் ரெக்கார்ட் செய்கிறார். அதற்குப்பின் பசுபதி இடம் சண்டை போட்டு உண்மையை எல்லோரிடமும் சொல்லப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.