கடுமையாக உழைக்கும் குமரன், துணையாக நிற்கும் விஜய்-நிவின், விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா வளைகாப்பு நினைத்து கோபமாக இருந்தார். அந்த சமயம் வந்த யமுனாவிடம் வீட்டில் வளைகாப்பு பற்றி பேசிய விஷயத்தை எல்லாம் கங்கா சொன்னார். யமுனா, வழக்கம் போல் காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் காவிரி -விஜய் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரிக்காக வாங்கி வைத்த முருகர் செயினை விஜய் போட்டு விட்டார். இன்னொரு பக்கம் கங்கா கோபமாக இருந்தார். குமரன் எவ்வளவோ சமாதானம் செய்துமே கங்கா கேட்கவில்லை.
நேற்று எபிசோட்டில் கங்காவின் வளகாப்பு பற்றி வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கங்கா திட்டியதை எல்லாம் குமரன் நினைத்து பார்த்தார். அந்த சமயம் வந்த காவிரி, விஜய் தனக்காக வாங்கி தந்த செயினை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் வந்தது. அதற்குப்பின் கங்காவிற்கு முன்னாடியே வளைகாப்பு வைக்கும் விஷயத்தைப் பற்றி காவிரியிடம் சொன்னார்கள். காவிரி சூழ்நிலை புரிந்து கொண்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவருமே தங்களுடைய வளைகாப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
மகாநதி:
காவிரி, எனக்கு சிம்பிளாக இருந்தா போதும் என்று தனக்கு எப்படி வளைகாப்பு நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் குமரன், கங்காவிடம் உனக்கு வளைகாப்பிற்கு என்ன வேண்டும் என்றார். அதற்கு கங்கா, எனக்கு ஒட்டியானம் ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களால் அதெல்லாம் வாங்கித் தர முடியாது. வீட்டிற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு ஒழுங்கா போட்டா போதும். நான் வசதியாக வாழனும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு தான் கொடுப்பினை இல்லை என்றெல்லாம் குமரன் மனது கஷ்டப்படுவது போலவே பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரன், கங்காவின் வளைகாப்பை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு புது ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், அதை நாலு நாட்களில் முடிக்கணும் என்பது கஷ்டமான விஷயம் தான். இருந்தாலுமே குமரன் அந்த ஆர்டரை எடுத்துக் கொள்கிறார். இதைப்பற்றி நிவின் விஜயிடம் சொல்லியிருக்கிறார். வீட்டிற்கு வந்த குமரன், புது ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. நான் கடைக்கு போகணும் என்று சொல்கிறார். வீட்டில் எல்லோருமே வேண்டாம் என்று சொல்லிமே குமரன் கேட்கவில்லை. ஆனால், கங்கா வழக்கம் போல் குமரனை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
குமரன் கடையில் தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து நிவின்- விஜய் இருவருமே அவருக்கு சப்போர்ட்டாக வந்துவிடுகிறார்கள். பின் மூவரும் கலகலப்பாக பேசி. ஒரு கட்டத்தில் நிவின்- விஜய் இருவரும் தூங்கி விடுகிறார்கள். இருந்தாலும் விடாமல் குமரன் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதோட வேலைக்கு சில ஆட்களையும் குமரன் வைத்து செய்கிறார். பின் தூக்கத்தில் விஜய், காவேரியின் பெயரை சொல்லி கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நிவின்- குமரன் இருவருமே கிண்டல் செய்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.