மலேசியா கிளம்பும் குமரனை கோபத்தில் ஏளனமாக பேசும் கங்கா, கவலையில் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 13/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந். பின் இருவருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய்- காவேரி இருவரும் நடந்து சொன்னார்கள். அப்போது காவிரி, ன்னைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். பின் விஜய் ஐஸ்கிரீம் வாங்க கடைக்குள் சென்று விட்டார். அப்போது பசுபதி காரை விட்டு காவேரி மீது மோத போகிறார். விஜய், காவிரியை காப்பாற்றி விட்டார்.

பின் விஜய், காவிரிக்கு தண்ணி கொடுத்து சமாதானம் செய்தார். அதற்குப்பின் இதெல்லாம் பசுபதி தான் செய்தார் என்று விஜய்க்கு தெரிந்தது. இருந்தாலும் அதை காவிரியிடம் சொல்லவில்லை. அதற்குப் பின் குமரன், வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்தார்.அப்போது குமரன், மலேசியாவில் துணி தைப்பதற்கான ஆர்டர் வந்திருக்கிறது. இரண்டு மூன்று மாதம் அங்கேயே தங்கி செய்ய வேண்டும். நான் மலேசியா போகப்போகிறேன். குழந்தை பிறக்கப் போகிறது பணம் வேண்டும. அதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றார்.

மகாநதி

இதைக்கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். கங்கா, வேண்டாமென்று சொல்லியும் குமரன் கேட்கவில்லை. அதற்குப்பின் விஜய், நிவின் இருவருமே குமரனிடம் விசாரித்தார்கள். அப்போது குமரன், நல்ல வாய்ப்பை கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ளணும். நான் போயிட்டு வருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிவின்- விஜய் இருவருமே குமரனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார்கள். பின் பழைய நினைவுகளை எல்லாம் மூணு பேருமே நினைத்து பார்த்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கங்கா, நீங்கள் மலேசியெல்லாம் ஒன்னும் போக வேண்டாம். நல்ல தகப்பனாக இருப்பதற்கு முயற்சி செய்கிறீர்களா? என்று வழக்கம் போல குமரனை ஏளனமாக பேசுகிறார். உடனே கோபப்பட்ட குமரன், நான் நல்ல கணவன் இல்லை என்று சொல்லிவிட்டாய். என்னுடைய குழந்தைக்கு தேவையானதை எல்லாம் நான் செய்வேன். நான் கண்டிப்பாக போவேன் என்று சொல்லி விடுகிறார். மறுநாள் குமரன் மலேசியா கிளம்புவதற்கு தயாராக இருக்கிறார் ஆனால், கங்கா கோபத்தில் இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் உள்ள எல்லோருமே குமரனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார்கள். அதற்குப்பின் குமரன் தன் பேச்சை கேட்காமல் போனதை நினைத்து கங்கா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு ஸ்கேன் செய்ய போவதால் கங்கா ஆர்வமாகவும் சந்தோஷமாக இருக்கிறார். விஜய், என்ன நடக்குமோ? குழந்தைக்கு பிரச்சனை இருக்குமோ? என்று கவலையில் இருக்கிறார். பின் ஒரு வழியாக கங்காவை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துப் போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full