கங்காவால் புலம்பி தள்ளும் குமரன், விஜய் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவருமே பசுபதி இடமிருந்து பத்திரத்தை மீட்டதை பற்றி ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, ஸ்கேன் செய்ய ஹாஸ்பிடல் போகணும் என்றார். உடனே குமரன், கங்காவிற்கும் செய்யணும் என்றார். காவிரி, ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம் என்று சொன்னார். ஆனால், கங்கா வேண்டாம் என்று தவிர்த்தார்.
வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போயிட்டு வாருங்கள் என்று சொல்வதால் கங்காவும் அமைதியாக ஒத்துக் கொண்டார். ஆனால் விஜய், காவிரியின் ஸ்கேன் நினைத்து வருத்தப்பட்டார். இதை அறிந்த காவிரி அம்மா,என்ன ஆச்சு என்று விசாரித்தார். அப்போது விஜய், அம்மை வந்திருந்ததால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். அதற்கு சாரதா ஆறுதல் சொன்னார்.
மகாநதி:
இன்றைய எபிசோட்டில் விஜய் இன்டர்வியூக்காக ஒரு கம்பெனிக்கு கிளம்ப தயாராக இருக்கிறார். அப்போது காவிரி அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்புகிறார். பின் சாரதா, விஜய் வெளியே கிளம்புவதை பற்றி கேட்கிறார். அதற்கு காவிரி, நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் விஜய் வேலைக்கு செல்ல நினைக்கிறார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார். இன்னொரு பக்கம் கங்கா, குழந்தை பிறப்பது தொடர்பான வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வீடியோவில் சொல்கிறார்கள். இதை கேட்டு கங்கா ரொம்பவே எமோஷனல் ஆகிறார். இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி கங்கா புலம்புகிறார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கங்காவிற்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால் கங்காவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. குமரனும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கங்கா குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=m_He-lPgCeE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் குமரன், முன்பு போல கங்கா இல்லை. எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாள், அடிக்கிறாள் என்று புலம்புகிறார். உடனே விஜய், காவிரியுமே அப்படிதான். அடிப்பால் கடித்து கொதறுவாள் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு காவிரி முறைக்கிறார். உடனே குமரன், கங்காவே பரவாயில்லை என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் விஜய், நான் சும்மா சொன்னேன் என்று சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், வேடிக்கையாக இருவருமே செல்ல சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.