பசுபதியால் பிரச்சனையில் சிக்கி கொண்ட குமரன், அதிர்ச்சியில் விஜய் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 13/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் விஜயின் சட்டையை வைத்து ரொமான்டிக்காக காவிரி டான்ஸ் ஆடுகிறார். அதற்குப்பின் விஜயினுடைய டைரியை எடுத்து காவிரி படித்தார். அப்போது விஜய்க்கு போன் செய்த காவிரி , டைரி படிக்கும் விஷயத்தை சொன்னவுடன் அவர், வேண்டாம் என்றார். ஆனால், காவிரி ஒவ்வொன்றாக படித்து காண்பித்தார். ஆரம்பத்தில் விஜய், காவிரி பற்றி ரொம்ப பாசமாக எழுதி, அதற்குப்பின் முழுக்க முழுக்க தன்னுடைய மகளை பற்றி தான் எழுதியிருந்தார். இதையெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் வந்து விஜயிடம் செல்லமாக சண்டை போட்டார். இன்னொரு பக்கம் குமரன் ஹாஸ்பிடலில் துணிகளை கொடுக்க போனார்.

அங்கு பசுபதி, வெண்ணிலாவின் மாமா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை ஒளிந்து நின்று குமரன் பார்த்தார். அப்போது வெண்ணிலாவின் மாமா, விஜயின் சொத்து கிடைக்கும். வெண்ணிலா சந்தோசமாக வாழ்வாள் என்று ஆசை காட்டி விஜய்க்கு எதிராக செய்ய சொன்னீர்கள். பின் சண்டையில் வெண்ணிலாவை நீங்களே மாடியில் இருந்து தள்ளிவிட்டு இப்போது அவளே தற்கொலை செய்து கொண்டால் என்று வீண் பழி போட்டு விட்டீர்கள். இதெல்லாம் நியாயமா? என்று கேட்டார். உடனே பசுபதி கோவப்பட்டு வழக்கம் போல வெண்ணிலா மாமாவை மிரட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்ட குமரன் ஷாக் ஆகி மொபைலில் ரெக்கார்ட் செய்தார். அதற்குப்பின் பசுபதி இடம் சண்டை போட்டு உண்மையை எல்லோரிடமும் சொல்லப் போனார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் குமரன், காவிரிக்கு போன் செய்து ஹாஸ்பிடலில் நடந்ததை எல்லாம் சொன்னார். பசுபதி தான் வெண்ணிலாவைமாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார் என்று உண்மையும் சொல்லி, அதை போனில் ரெக்கார்ட் செய்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குமரனின் பைக் மீது பசுபதி மோதி விட்டார். இதனால் குமரன் கீழே விழுந்து விடுவதால் போனும் கீழே போய் விழுந்தது. உடனே பசுபதி, குமரனின் போனை உடைத்து விட்டார். இன்னொரு பக்கம் காவிரி, இந்த உண்மையை விஜய்க்கு போன் செய்து சொன்னார். விஜய்யும் அதிர்ச்சியானார். அதற்குப்பின் குமரன், நிவின், காவிரி மூவருமே சந்தித்து பேசி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது நிவின், நாங்கள் பசுபதியை பார்த்து கொள்கிறோம் என்று காவிரியை அனுப்பி விட்டார்கள். ஹாஸ்பிடலில் பசுபதியும், வெண்ணிலாவின் மாமாவையும் பற்றி விசாரித்தார்கள். ஆனால், அவர்கள் யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டதாக சொன்னார்கள். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் நிவின்- குமரன் இருவரும் புலம்பி இருந்தார்கள். பின் இதை அறிந்த காவிரி, விஜய்யிடம் தகவலை சொன்னார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு விஜய் வந்தார். ஆனால், பசுபதி வீட்டிலேயே இல்லை. அப்போது போன் செய்த காவிரி, தயவுசெய்து அங்கிருந்து கிளம்புங்கள். போலீஸ் பிடித்து விடப் போகிறார்கள் என்று பயப்பட்டார். விஜய், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே குமரனுக்கு அடிபட்டிருப்பதை பார்த்து பயந்து விடுகிறார்கள். என்ன ஆனது? என்று எல்லாரும் விசாரிக்கிறார்கள். குமரன் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக பொய் சொல்லி விடுகிறார். அதற்குப்பின் கடையிலிருந்து குமரனுக்கு போன் வருகிறது. அதைக் கேட்டவுடன் குமரன் பதறி கொண்டு தன்னுடைய துணிக்கடைக்கு போய் பார்க்கிறார். அங்கு அவருடைய கடையை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். பின் இதை குமரன், நிவினிடம் சொல்ல, அவரும் வந்து விடுகிறார். அதிர்ச்சியில் நிவின், இது பசுபதி செய்த வேலைதான் என்று சொல்கிறார். குமரன் மனமுடைந்து அழுகிறார். அதற்குப்பின் குமரன் வீட்டிற்கு வந்து விடுகிறார். ஆனால், உண்மையை மறைத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

குமரன் சொன்னதில் கங்காவிற்கு சந்தேகம் வருகிறது. இன்னொரு பக்கம் காவிரி, நிவினுக்கு போன் செய்து என்ன நடந்தது? என்று விசாரிக்கிறார். அப்போது நிவின், கடையை அடித்து நொறுக்கிய விஷயத்தை சொன்னவுடன் காவிரி வருத்தப்படுகிறார். நிவின் ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறார். இதை பார்த்த யமுனா, வழக்கம் போல் நிவின், காவிரியை சந்தேகப்பட்டு சண்டை வாங்குகிறார். பின் காவிரி இதையெல்லாம் விஜயிடம் சொல்கிறார். மறுநாள் காலையில் குமரன் கடைக்கு போகிறார். அங்கு நிவின்- குமரன் இருவருமே கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த விஜய் கடையை பார்த்து ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full