சொத்தில் பங்கு கேட்டு விஜய் வீட்டில் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், எல்லோரிடமும் சண்டை போட்டு இனிமேல் காவிரியை பற்றி யாரும் பேசக்கூடாது என்று ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே காவேரி, பாட்டி சொன்னதையும், தன் அப்பா செய்த துரோகத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் சாரதா, சந்தானம் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக உடைந்து போய் அழுதார். கங்கா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாராதவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
முத்து மலர் குடும்பத்தினர் சாரதா இருக்கும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். சாரதா, கங்கா எல்லோருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார்கள். ஆனால், முத்துமலர் குடும்பத்திலிருந்து யாருமே வெளியே போக முடியாது என்று வீட்டுக்குள் உட்கார்ந்து பிரச்சனை செய்தார்கள். சொத்தை பிரித்து தரும் வரை இங்கதான் இருப்போம் என்றார்கள். இதனால் சாரதா, காவிரிக்கு போன் செய்தார். ஆனால், போனை பாட்டி, சித்தி இருவரும் தான் எடுத்து பேசி இருந்தார்கள். பின் அங்கு நடக்கும் பிரச்சனை எல்லாம் சாரதா அவர்களிடம் சொன்னார்கள்.
மகாநதி:
அந்த சமயம் வந்த காவிரி போனை வாங்கி தன்னுடைய அம்மாவிடம் பேசி இருந்தார். அப்போது முத்துமலர் குடும்பம் வந்த விஷயத்தைப் பற்றி சாரதா சொன்னவுடன் காவேரி பதறி கொண்டு கிளம்ப தயாராகினார். உடனே பாட்டி, தாத்தா எல்லோருமே தினமும் ஒரு பிரச்சனை வருவதா? என் பேரனுக்கு இது எல்லாம் தலையெழுத்தா? என்று காவிரி குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். விஜய், அமைதியாக இருங்கள். நான் வந்து பேசுகிறேன் என்று காவிரியை அழைத்துக் கொண்டு வந்தார். பின் காவிரி, என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று எமோஷனலாக பேச, விஜய் ஆறுதல் சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி, விஜய் இருவருமே சாரதா வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அப்போது முத்து மலர், எங்களுக்கு சேர வேண்டிய பங்கு கொடுத்துவிட்டால் நாங்கள் இருந்து கிளம்புவோம். அதுவரை இங்கு தான் இருப்போம் என்று சொல்கிறார்கள். விஜய், காவிரி இருவரும் எவ்வளவு எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், முத்துமலர் மகன் கேட்கவே இல்லை. ஒரு கட்டத்தில் கங்கா கோபப்பட்டு கத்தியால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இதனால் விஜய், நீங்கள் இங்கே இருந்தால் பிரச்சினை தான் செய்வார்கள். எங்கள் வீட்டிற்கு கிளம்பலாம் என்று எல்லோரையும் சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைக்கிறார். பின் விஜய், சாரதா குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.
சீரியல் ட்ராக்:
இதை பார்த்து முத்து மலர் குடும்பத்தினர் பயங்கரமாக கோபப்படுகிறார்கள். விஜய், தன்னுடைய வீட்டுக்கு வருவதற்குள்ளே முத்துமலர் குடும்பத்தினர் அங்கு வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து தாத்தா, பாட்டி எல்லோருமே என்ன இது? ஏன் என்று கேட்கிறார்கள். பின் சாரதா, எதற்காக எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்றெல்லாம் கோபப்பட்டு சண்டை போடுகிறார். முத்துமலர் மகன், எங்களுக்கு பங்கு கொடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று பிரச்சனை செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது