முத்துமலர் சொன்ன விஷயத்தால் கொந்தளித்த சாரதா, விஜய் எடுத்த முடிவு - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவினிடம் விஜய் நடந்தது எல்லாம் சொன்னார். நிவின், எப்படியாவது இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அப்போது வந்த காவிரி, கிருஷ்ணாவால் வேலை ஒழுங்காக நடக்கவில்லை. அதை கவனியுங்கள் என்றார். விஜய், உண்மையை சொல்லாமல் சரி என்றார். அதற்குப்பின் கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கிருந்து கிளம்ப சொன்னார். முத்துமலர், சிந்து இருவரும் வீட்டை விட்டு கிளம்புவதை நிவின்- விஜய் இருவரும் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள்.
முத்து மலர்- சிந்து இருவரையும் பின் தொடர்ந்து விஜய்-நிவின் சென்றார்கள். பின் முத்துமலர், கிருஷ்ணா, சிந்து மூவரும் காரில் தப்பிக்க பார்த்தார்கள். உடனே விஜய்-நிவின் தடுத்து நிறுத்தி கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். அப்போது விஜய், கிருஷ்ணாவை அடித்து உண்மையைக் கேட்டார். முத்து மலர், உங்கள் மாமனருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் பசுபதி சொல்லித்தான் இப்படி நடித்தோம் என்று உண்மையை சொல்லி விட்டார்.
மகாநதி:
இதைக் கேட்ட விஜய்- நிவின் இருவரும் சாக்கானார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து கிருஷ்ணா, ராகவுடன் பேசியது எல்லாம் விஜய்-நிவின் சொன்னார்கள். பின் முத்து மலர் குடும்பத்தை அழைத்து வந்து உண்மையை சொல்ல சொன்னார் விஜய். அப்போது முத்துமலர், நான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி என்று சொன்னதெல்லாம் பொய்தான். பசுபதி சொல்லி தான் நாங்கள் நடிக்க வந்தோம் என்றார். இதைக்கேட்டு சாரதா அதிர்ச்சி ஆனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபத்தில் சாரதா, முத்து மலர் குடும்பத்தை திட்டிக் கொண்டிருக்கிறார். முத்து மலர், நாங்கள் இதனை பணத்துக்காக செய்யவில்லை. பசுபதி சொன்னது போல் செய்யவில்லை என்றால் எங்களை கொன்னுடுவேன் என்று மிரட்டினார். அதற்காகத்தான் நாங்கள் இப்படி செய்தோம். உங்களுக்கு செய்தது பெரிய துரோகம் தான் மன்னித்து விடுங்கள் என்று கேட்கிறார். கோபத்தில் சாரதா அருவாளை எடுத்து முத்துமலரை வெட்டப் போகிறார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் விஜய், உங்களுக்கான தண்டனை கொடுக்கப்படும் என்று போலீசில் கம்பளைண்ட் கொடுத்து விடுகிறார். பின் விஜய் வீட்டிற்கு வந்த போலீஸ், கிருஷ்ணா- முத்து மலர் குடும்பத்தை கைது செய்து செல்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி தன் தந்தையை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது