பசுபதியின் திட்டத்தை அறிந்த நிவின், வெண்ணிலாவை காப்பாற்றுவாரா காவிரி? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், ராகினி இடம் பசுபதியை பற்றி பொறுமையாக பேசி விசாரித்தார். ஆனால், ராகினி சுதாரித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார். அதற்குப்பின் நிவினை சந்தித்த குமரன், யமுனா தான் விஜய்யை போலீஸில் சிக்க வைத்திருக்கிறார் என்று நடந்ததை சொன்னவுடன் நிவினுக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவை சந்திக்க காவிரி, ஹாஸ்பிடல் போயிருந்தார். அங்கிருந்த நர்ஸ், வெண்ணிலாவிடம் மாற்றம் தெரிகிறது என்று சொன்னதால் காவிரி வெண்ணிலாவிடம் பேசினார். கடைசியில் வீட்டிற்கு வந்த நிவின், எதற்காக விஜய்யை போலீசில் மாட்டி விட்டார் என்று கேட்க, யமுனா மோசமாக பேசி இருந்தார்.
யமுனா, நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு விஜய்யை பகடைக்காயாக வைத்திருந்தீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசினார். இதனால் கோபத்தில் நிவின் யமுனாவை அடிக்கப் போனார். இருந்தாலுமே யமுனா கேட்காமல் காவிரியை பற்றி தவறாகவே பேசிக் கொண்டிருந்தார். இதனால் நிவின் அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் சென்ற குமரன், வெண்ணிலா மாமாவின் உடைய அட்ரஸை எப்படியோ பேசி வாங்கி விட்டார். பின் அவரின் ஊருக்கு கிளம்புகிறார். இன்னொரு பக்கம் நிவின், ராகினியை சந்தித்து பேசினார்.
மகாநதி:
அப்போது நிவின், பசுபதி இருக்கும் இடத்தை பற்றி மெதுவாக பேசி வாங்க பார்த்தார். ஆனால், ராகினி
சொல்லவே இல்லை. சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வெண்ணிலா மாமாவின் ஊருக்கு சென்ற குமரன், அங்கு இருப்பவர்களிடம் எல்லாம் விசாரித்தார். பின் காவேரிக்கு போன் செய்த குமரன், வெண்ணிலா கண்டிஷன் எப்படி இருக்கு என்று பார் என்றார். இதனால் காவிரியுமே ஹாஸ்பிடலுக்கு போனார். ஆனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலமாக இருப்பதால் காவேரி மறைந்து கொண்டார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் நர்சுக்கு போன் செய்த காவேரி, வெண்ணிலாவை பார்க்க கேட்டார். ஆனால், அவர் போலீஸ் இருப்பதால் முடியாது என்று மறுத்து விட்டார். காவேரியை பாலோ செய்த பசுபதி ஆட்கள் போன் செய்து பசுபதியிடம் சொன்னார்கள். அப்போது பசுபதி, காவிரியை போலீசிடம் மாட்டி விடுங்கள் என்றார். அந்த ஆட்களுமே போலீஸ் இடம் காவிரியை மாற்றி விட்டார்கள். அப்போது போலீஸ், காவேரிக்கு வர்னிங்க் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதற்குப்பின் போலீஸ் போன பிறகு காவேரி வெண்ணிலாவை சந்தித்து பேசுகிறார். வெண்ணிலாவும் கண் விழித்து விட்டார். அப்போது காவிரி, விஜய் ஜெயலில் இருந்தார். பசுபதி தான் உன்னை தள்ளிவிட்டார் என்று தெரியும்.
சீரியல் ட்ராக்:
தயவு செய்து உண்மையை சொல்லு. உனக்கும் விஜய்க்கும் நடுவில் நான் வரமாட்டேன். இது சத்தியம் என்று ரொம்பவே கதறி அழுதார். ஆனால், வெண்ணிலா எதுவுமே பேசவில்லை. அதற்கு பின் போலீஸ் வருவதால் காவேரி வந்து விட்டார். அதற்குப்பின் வெண்ணிலா காவிரியிடம் பேச வேண்டும் என்று நர்ஸிடம் சொன்னார். அதற்குப்பின் காவிரியும் வெண்ணிலாவை சந்திக்க வந்தார். அப்போது வெண்ணிலா, உண்மையாகவே நீ விஜய் வாழ்க்கையை விட்டு போய்விடுவாயா? என்று கேட்டார். அதற்கு காவேரி சம்மதித்தார்.
https://www.youtube.com/watch?v=NRJwti9QIZI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பசுபதியை பார்ப்பதற்காக செல்லும் ராகினியை பாலோ செய்கிறார் நிவின். அப்போது பசுபதி, வெண்ணிலாவிற்கு நினைவு திரும்பி விட்டதாக சொல்கிறார்கள். நீங்கள் உடனே வெண்ணிலா கதையை முடித்து விடுவீர்கள் என்று சொல்கிறார். இதையெல்லாம் நிவின் கேட்டு வருகிறார். அதோட நிவின் ஒரு பொருளை தள்ளி விடுவதால் பசுபதி வெளியே வருகிறார். ஆனால், அதற்குள் நிவின் தப்பித்து விடுகிறார். பின் காவிரிக்கு போன் செய்த நிவின், வெண்ணிலாவின் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார்.