பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நிவின், குமரனுக்கு வந்த புது ப்ரச்சனை - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 15/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரியை பாலோ செய்த பசுபதி ஆட்கள் போன் செய்து பசுபதியிடம் சொன்னார்கள். அப்போது பசுபதி, காவிரியை போலீசிடம் மாட்டி விடுங்கள் என்றார். அந்த ஆட்களுமே போலீஸ் இடம் காவிரியை மாற்றி விட்டார்கள். அப்போது போலீஸ், காவேரிக்கு வர்னிங்க் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அதற்குப்பின் போலீஸ் போன பிறகு காவேரி வெண்ணிலாவை சந்தித்து பேசுகிறார். வெண்ணிலாவும் கண் விழித்து விட்டார். அப்போது காவிரி, விஜய் ஜெயலில் இருந்தார். பசுபதி தான் உன்னை தள்ளிவிட்டார் என்று தெரியும்.

தயவு செய்து உண்மையை சொல்லு. உனக்கும் விஜய்க்கும் நடுவில் நான் வரமாட்டேன். இது சத்தியம் என்று ரொம்பவே கதறி அழுதார். ஆனால், வெண்ணிலா எதுவுமே பேசவில்லை. அதற்கு பின் போலீஸ் வருவதால் காவேரி வந்து விட்டார். அதற்குப்பின் வெண்ணிலா காவிரியிடம் பேச வேண்டும் என்று நர்ஸிடம் சொன்னார். அதற்குப்பின் காவிரியும் வெண்ணிலாவை சந்திக்க வந்தார். அப்போது வெண்ணிலா, உண்மையாகவே நீ விஜய் வாழ்க்கையை விட்டு போய்விடுவாயா? என்று கேட்டார். அதற்கு காவேரி சம்மதித்தார்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் வெண்ணிலா, நீ எனக்கு கொடுத்த சத்தியத்தை எப்படி நம்புவது? இதற்கு முன்பே எனக்கு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஏமாற்றி விட்டாய். உன்னை நான் நம்ப மாட்டேன் என்று சொன்னார். உடனே காவேரி, எமோஷனலாக வெண்ணிலாவின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்து என் குழந்தையின் மீது சத்தியம். நான் விஜய்யை உனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன் என்று அழுதார். இதை கேட்டவுடன் வெண்ணிலா ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் நிவின், ராகினிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது பசுபதியை பற்றி விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை போனை வைத்து விட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் நிவின் நேரடியாக ராகினி வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது நிவின் ரொம்ப எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார். பின் பசுபதி பற்றியும் கேட்டார். ராகினி ஏதேதோ சொல்லி சமாளித்து நிவினை அனுப்பி விட்டார். பின் ராகினி தன்னுடைய அப்பாவை பார்க்க கிளம்பி இருந்தார். பின்னாடியே நிவின் பாலோ செய்தார். இன்னொரு பக்கம் குமரன், வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு சென்றார். அங்கு வெண்ணிலாவின் அத்தை தான் இருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்று விசாரித்தார். ஆனால், வெண்ணிலாவின் அத்தை உண்மை சொல்லாமல் ஏதேதோ காரணத்தை சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலாவின் அத்தை, என் கணவரை பசுபதி ஆட்கள் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆடியாட்கள் தான் போன் செய்து அவ்ரிடம் பேச தருவார்கள். நான் உண்மையை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் என்கிறார். பின் குமரன், நீங்கள் போன் செய்து பேசுங்கள் என்றார். வெண்ணிலா அத்தையும் போன் செய்து பேசுகிறார். அப்போது குமரன், ரேஷன் கார்டு அட்ரஸ் கேட்க வந்தது போல் வெண்ணிலாவின் மாமாவிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம் ராகினியை, நிவின் பாலோ செய்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

ராகினி, பசுபதி இருக்கும் இடத்திற்கு போகிறார். ஒரு வழியாக நிவின், பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். அப்போது குமரன், வெண்ணிலாவின் மாமாவை தேடி சென்றிருக்கும் விஷயம் பசுபதிக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் தன்னுடைய அடியாட்களை வைத்து குமரனை பிடிக்க சொல்கிறார். பசுபதி ஆட்களும் குமரனை பிடிக்கப் போகிறார்கள். அப்போது குமரன் தப்பித்து எப்படியோ ஓடிவிடுகிறார். இன்னொரு பக்கம் காவேரி, விஜயின் நிலைமையை நினைத்து வேதனை பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு கங்கா ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full