யமுனாவை விவாகரத்து செய்ய சொல்லும் நிவின் அம்மா, காவிரி சொன்ன ஐடியா - மகாநதி

By subhashini · 16/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா-காவிரி இருவருக்கும் ஸ்கேன் செய்தார்கள். பிறகு டாக்டர், கங்கா- காவேரி இருவரின் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். இதனால் இருவருமே சந்தோஷப்பட்டார்கள். விஜய், சாரதாவும் காவிரியின் குழந்தை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அப்போது விஜய், உனக்கு அம்மை நோய் வந்தபோது குழந்தைக்கு பிரச்சனை என்று சொன்னார்கள். அதனால் தான் பயந்துவிட்டோம் என்றார். இதனால் சாரதா, நேர்த்திக்கடன் இருக்கு. கோயிலுக்கு போகலாம் என்றார். இதை எல்லாம் பார்த்து கங்காவிற்கு பயங்கர கோபம் வந்தது.

காவேரிக்காக சாரதா செய்த வேண்டுதலால் கோபப்பட்டார் கங்கா. விஜய்- காவிரி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். பின் வீட்டிற்கு வந்த சாரதாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே கங்கா, இதெல்லாம் தேவையா? அவள் குழந்தைக்கு என்ன பிரச்சனை, நல்லாதானே இருக்கு என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். உடனே காவிரி, உனக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கணுமா, என்னதான் பிரச்சனை என்றார். அதற்கு கங்கா, காவிரி- சாரதாவை திட்டி விட்டு சென்றார்.

மகாநதி:

அதற்குப்பின் யமுனாவிற்கு போன் செய்த கங்கா நடந்ததை எல்லாம் சொன்னார். யமுனாவும் இன்னும் கொஞ்சம் காவிரியை பற்றி ஏத்தி விட்டார். அதற்குப்பின் விஜய் வீட்டிற்கு வந்தார். அப்போது விஜய், நிவின் ரொம்ப பாவம். யமுனாவை தெரியாமல் நிவினுக்கு கல்யாணம் செய்து விட்டோம். அவர் ரொம்பவே எமோஷனலாக பேசி புலம்புகிறார் என்றெல்லாம் சொன்னார். காவிரியுமே வருத்தப்படுகிறார். பின் விஜய், காவிரிக்கு கால் அமுத்திவிட்டு பேசி கொண்டு இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய் கொடுத்த பணத்தை காவிரி, சாரதாவிடம் கொடுத்து வாடகை கட்ட சொல்கிறார். சாரதா வேண்டாம் என்று சொன்னாலுமே காவிரி கேட்கவில்லை. பின் விஜய், பணம் கொடுத்த விஷயத்தை சொன்னவுடன் கங்காவுக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் கொடைக்கானல் வீட்டிற்கு வெளியே ரவுடிகள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வதாக சாரதாவிற்கு போன் வருகிறது. பின் காவிரி, வழக்கம் போல வீட்டை ரெண்டுக்கு விடலாம் என்று சொல்கிறார். உடனே கங்கா, யார் அதை பார்த்துக் கொள்வது? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

விஜய், கேமரா வைத்து அங்கு ஒரு ஆளை போட்டு வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லலாம். நாம் இங்கிருந்தே பார்த்துக் கொள்ளலாம். வீடும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்வதால் சாரதாவும் ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு லேட்டாக வருகிறார். இதைப் பார்த்து அவருடைய அம்மா, ஏன் லேட்டாக வருகிறாய்? ஒழுங்காக நீ சாப்பிடுவது கூட இல்லை என்று வருத்தப்படுகிறார். அப்போது நிவின், புதிதாக தான் தொடங்க இருக்கும் தொழிலை பற்றி பேசுகிறார். பின் நிவின் அம்மா, ரெண்டு பேருமே சேர்ந்து பேசி கூட நான் பார்த்ததில்லை. உனக்கு இந்த கல்யாணத்திலும் விருப்பமில்லை, அவளையும் பிடிக்கவில்லை. எதற்காக இப்படி கஷ்டப்பட்டு வாழனும், யமுனாவிற்கு விவாகரத்துக் கொடு என்று சொல்கிறார். இதை கேட்டு யமுனாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full