யமுனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிவின், கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் - மகாநதி

By subhashini · 28/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலா, தான் செய்த தவறுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார். அதற்கு விஜய் அவருக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து வெண்ணிலாவின் மாமா வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது அவர், விஜயின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு வெண்ணிலாவை நானே அழைத்துச் செல்கிறேன் என்றார். உடனே விஜய்யின் தாத்தா, நாளை செல்லுங்கள் என்று சொல்வதால் வெண்ணிலாவின் மாமாவும் சம்மதித்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற காவிரியை பார்த்து அவருடைய அம்மா, எங்கே போனாய்? விஜய்யை பார்த்தாயா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

அதற்கு காவிரி, பசுபதியால் விஜய் மாட்டிக் கொண்டார். அதனால் தான் நான் விஜய்க்கு உதவி செய்தேன். உன்னிடம் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி நான் எதையும் செய்ய மாட்டேன் என்று சென்று விட்டார். பின் காவிரி, விஜய்யை விட்டு பிரிந்து போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக கதறி அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், காவிரியை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். காவிரிக்கு மெசேஜ், போன் எல்லாம் விஜய் பண்ணுகிறார். ஆனால், காவேரி எந்த ரிப்ளைமே செய்யவில்லை. விஜய்க்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று புரிகிறது. இன்னொரு பக்கம் காவேரி, விஜயை மறக்கவும் முடியாமல் சேர்ந்து வாழவும் முடியாமல் ரொம்பவே வேதனை பட்டுக் கொண்டிருந்தார்.

மகாநதி:

காவிரி போன் எடுக்காததால் விஜய் ரொம்பவே கவலையில் இருந்தார். அப்போது வெண்ணிலா தனியாக இருப்பதை பார்த்த விஜய் பேச போனார். இன்னொரு பக்கம் வெண்ணிலாவும் தூங்காமல் நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய், இன்னும் தூங்கவில்லையா? உன்னுடைய மாமா வீட்டில் தான் இருக்கிறார் என்று சொல்லி ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு சென்ற நிவினிடம் வழக்கம் போல யமுனா சண்டை வாங்கினார். இதனால் கோபப்பட்ட நிவின், உன்னிடம் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்கு மரியாதையாக துணியை எடுத்து கொண்டு கிளம்பி விடு என்று திட்டிவிட்டு சென்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

மறுநாள் காலையில் குமரனிடம் காவிரி, நான் பசுபதியை பார்க்க வேண்டும். அதேபோல் நான் கொடைக்கானல் போகலாம் என்று இருக்கிறேன். நீங்கள் தான் அம்மாவிடம் பேசணும் என்று சொன்னார். அதற்குப்பின் தன்னுடைய அம்மாவிடம் காவிரி, எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை கொடைக்கானல் போகிறேன் என்று சொன்னார். ஆரம்பத்தில் காவிரியின் அம்மா தயங்கினாலும் அதற்கு பின் ஒத்துக் கொண்டார். பின் குமரன், காவிரி இருவருமே ஜெயிலுக்கு சென்று பசுபதியை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது பசுபதி, இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட்டார். பதிலுக்கு காவிரியுமே சவால் விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி-கங்கா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காவிரி, பசுபதியை பார்த்த விஷயத்தை சொல்கிறார். உடனே கங்கா, விஜய் பற்றி அம்மாவிடம் பேசலாம். நீயும் விஜயும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் செல்கிறார். ஆனால், காவிரி அதை பற்றி கண்டுகொள்ளவில்லை. அப்போது விஜய் போன் பண்ணி கொண்டே இருக்கிறார். ஆனால், காவிரி போன் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் குமரன்- கங்கா இருவரும் காவேரி, விஜய் இருவரும் சேர்த்து வைப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய், காவிரி போன் எடுக்காததால் ரொம்பவே டென்ஷனாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் நிவின், யமுனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார். ஆனால், யமுனா போக முடியாது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். கோபத்தில் நிவின், யமுனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். அந்த சமயம் வந்த குமரன், யமுனாவை பிடித்து எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று கேட்கிறார். அப்போது நடந்த எல்லாவற்றையும் நிவின், குமரனிடம் சொல்கிறார். பின் குமரன், யமுனாவை உள்ளே அனுப்பிவிட்டு நிவினுக்கு அறிவுரை சொல்கிறார். அந்த சமயம் பார்த்து குமரனுக்கு போன் செய்த விஜய், காவேரி எங்கே என்று கேட்கிறார். அப்போது குமரன், காவிரி கொடைக்கானலுக்கு கிளம்பி இருப்பாள். உங்களுக்கு தெரியாதா? என்று சொல்கிறார். இதனால் விஜய் ரொம்பவே ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full