கிருஷ்ணாவின் சுயரூபத்தை அறிந்த நிவின், உண்மையை கண்டுபிடிப்பாரா விஜய்? மகாநதி

By subhashini · 14/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் விஜய் செய்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் வேலை செய்யும் இடத்தில் பொருட்கள் வராததால் எந்த வேலையுமே நடக்கவில்லை. கிருஷ்ணா அதை அலட்சியமாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த காவிரி, மேஸ்திரியிடம் விசாரித்தார். அப்போது கிருஷ்ணா செய்த வேலை எல்லாம் காவிரிக்கு தெரிய வருகிறது.

பின் இதைப் பற்றி கிருஷ்ணாவிடம் காவிரி கேட்கின்றார். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்று விட்டார். இன்னொரு பக்கம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை எல்லாம் சாரதா குடும்பத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் விஜய்- காவிரி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, வேலை செய்யும் இடத்தில் கிருஷ்ணா செய்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது. பின் விஜய், இனிமேல் இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

மகாநதி:

விஜய்-காவிரி வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. எல்லோருமே பொங்கல் வைக்க தயாராகி வந்தார்கள். பின் கிராமத்து ஸ்டைலில் பொங்கல் வைத்து எல்லோரும் பண்டிகையை கொண்டாடினார்கள். அதற்குப்பின் விஜய் போட்டி வைத்தார். முதலில் கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. அதில் விஜய் அணி தான் வெற்றி பெற்றார்கள். இரண்டாவது ஆக பானை உடைக்கும் போட்டி நடக்கிறது. அதைப்பற்றி விஜய் விவரித்து கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் உரியடிக்கும் போட்டியில் விஜய் வெற்றி பெற்று விடுகிறார். அதற்குப்பின் சேர் போட்டி நடக்கிறது. எல்லோருமே சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கிருஷ்ணா, சேர் நகர்த்தி விடுவதால் காவேரி கீழே விழுந்து விடுகிறார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். கிருஷ்ணா, தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்கிறார். விஜய்க்கு கிருஷ்ணாவின் மீது பயங்கர கோபம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நிவினை சந்தித்த விஜய், கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் பற்றி எல்லாம் சொல்லி கிருஷ்ணாவை கண்காணிக்க சொல்கிறார். நிவினும் சரி என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். கங்கா தன்னுடைய கணவர் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். யமுனா, கங்காவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் கிருஷ்ணாவை பின் தொடர்ந்து நிவின் செல்கிறார். அப்போது கிருஷ்ணா, பசுபதி மகன் ராகவ் உடன் நின்று பேசுவதை பார்த்து நிவின் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full