பசுபதியிடம் வசமாக சிக்கிய நிவின், வெண்ணிலாவை காப்பாற்ற போராடும் காவிரி - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் அத்தை, என் கணவரை பசுபதி ஆட்கள் அடைத்து வைத்திருந்தார்கள். அந்த ஆடியாட்கள் தான் போன் செய்து அவ்ரிடம் பேச தருவார்கள். நான் உண்மையை சொன்னால் அவரை கொன்று விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள் என்றார். பின் குமரன், நீங்கள் போன் செய்து பேசுங்கள் என்றார். வெண்ணிலா அத்தையும் போன் செய்து பேசி இருந்தார். அப்போது குமரன், ரேஷன் கார்டு அட்ரஸ் கேட்க வந்தது போல் வெண்ணிலாவின் மாமாவிடம் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராகினியை, நிவின் பாலோ செய்து சென்றார்.
ராகினி, பசுபதி இருக்கும் இடத்திற்கு போனார். ஒரு வழியாக நிவின், பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டார். அப்போது குமரன், வெண்ணிலாவின் மாமாவை தேடி சென்றிருக்கும் விஷயம் பசுபதிக்கு தெரிய வருகிறது. இதனால் அவர் தன்னுடைய அடியாட்களை வைத்து குமரனை பிடிக்க சொன்னார். பசுபதி ஆட்களும் குமரனை பிடிக்கப் போனார்கள். அப்போது குமரன் தப்பித்து எப்படியோ ஓடிவிட்டார். இன்னொரு பக்கம் காவேரி, விஜயின் நிலைமையை நினைத்து வேதனை பட்டுக்கொண்டிருந்தார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் குமரன், பசுபதியின் ஆட்கள் முகத்தில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் பசுபதி, வெண்ணிலாவிற்கு நினைவு திரும்ப விட்டது. அவர் கதையை முடித்து விடுங்கள் என்று தன்னுடைய ஆட்களிடம் சொல்லி அனுப்பி இருந்தார். நிவின் இதையெல்லாம் கேட்டு விட்டார். அதோட நிவின் கால் தடுமாறி கீழே விழுவதால் சத்தம் கேட்டு பசுபதி வெளியே வந்தார். ஆனால், நிவின் அதற்குள் தப்பித்து விட்டார். பின் நிவின், பசுபதி இருக்கும் இடத்தை குமரனுக்கு சொன்னார். அதற்கு பின் காவேரி, குமரனுக்கு போன் செய்து நடந்ததை விசாரித்தார்.
நேற்று எபிசோட்:
அதன் பின் காவிரியிடம் நிவின், வெண்ணிலாவுக்கு ஆபத்து. நான் ஹாஸ்பிடல் போகிறேன் என்று சொன்னார். அதற்குள் பசுபதியின் ஆட்கள் வெண்ணிலாவை தாக்க வர, காவிரி விரட்டி அடித்தார். பின் அந்த இடத்திற்கு போலீஸ் வந்தது. கொந்தளித்த காவிரி, உயர் அதிகாரி வரும் வரை இங்கிருந்து போக மாட்டேன். வெண்ணிலாவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஹாஸ்பிடலில் இருந்தார். காவிரிக்கு துணையாக நிவினும் அங்கே இருந்தார். இன்னொரு பக்கம் யமுனா வீட்டிற்கு நிவின் வரவில்லை என்று கோபப்பட்டு கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிவின், காவிரியை வீட்டுக்கு போக சொல்ல, காவிரி மறுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமரனுக்கு போன் செய்த கங்கா, வெண்ணிலாவின் மாமாவை கண்டுபிடித்து விட்டீங்களா? என்று கேட்கிறார். அதற்கு குமரன், சென்னையில் தான் இருக்கிறார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு வந்த போலீஸ், காவிரியை பார்த்தவுடன் எதற்காக இங்கு இருக்கிறாய்? என்று கத்துகிறார். உடனே காவிரி, நடந்ததை எல்லாம் சொல்கிறார். இருந்தாலுமே போலீஸ் காவிரியை நம்பவில்லை. காவிரியை அங்கிருந்து போக சொல்கிறார்கள். அதற்குப்பின் கண்விழித்த வெண்ணிலா, கோர்ட்டுக்கு போகலாமா? என்று கேட்கிறார். அதற்கு அந்த நர்ஸ், உங்களை கோர்ட்டுக்கு போலீஸ் அழைத்து செல்லும் மாதிரி தெரியவில்லை என்றார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து காவிரி, நர்ஸ் கெட்டபில் ஸ்கேன் எடுக்கணும் என்று வெண்ணிலாவை அழைத்துப் போகிறார். போலீசுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. இன்னொரு பக்கம் பசுபதியை மண்டையில் அடித்து கீழே தள்ளுகிறார் நிவின். உடனே அங்கிருந்த பசுபதி ஆட்கள் நிவினை கட்டி போட்டு விடுகிறார்கள். இருந்தாலுமே கயிறை அறுத்து அறுத்துவிட்டு ராகினியின் கழுத்தில் கத்தியை வைத்து பசுபதியை மிரட்டுகிறார் நிவின். இன்னொரு பக்கம் குமரன், பசுபதி ஆட்கள் எல்லாம் அடித்து விட்டு வெண்ணிலாவின் மாமாவை காப்பாற்றுகிறார். அதோடு வெண்ணிலாவுக்கு இருக்கும் ஆபத்தை பற்றியும் எடுத்து சொல்வதால் வெண்ணிலா மாமா உண்மையை கோர்ட்டில் சொல்வதற்காக கிளம்புகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது