விஜய்-காவேரியை சேர்த்து வைக்க சகோதரிகள் போடும் திட்டம், நிவின் சொன்ன வார்த்தை - மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நர்மதாவை பார்ப்பதற்காக கங்கா- யமுனா வீட்டிற்கு வந்தார்கள். பின் நான்கு சகோதரிகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள். அதோடு விஜய்- அம்மு இருவருமே நர்மதாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அதற்குப்பின் தாத்தா சொன்னதால் காவேரி, விஜயின் வீட்டிற்கு போனார். அப்போது பள்ளியில் அம்முவை நன்றாக பார்த்துக் கொண்டதற்காக ஒரு சின்ன பரிசை கொடுத்தார். காவிரியும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
விஜய், அவசர வேலை என்பதால் வெளியே சென்று விட்டார். பின் காவேரி- அம்மு இருவரும் விஜயன் ரூமிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவேரி, அம்முவிற்கு தெரியாமல் விஜயினுடைய அறையை திறந்து பார்த்தார். அங்கு டைரி இருக்கிறது. டைரிக்கு அடியில் காவிரி- விஜய் சேர்ந்திருக்கும் போட்டு இருக்கிறது. ஆனால், அதை காவிரி கவனிக்கவில்லை. டைரியை மட்டும் காவிரி எடுத்தார். விஜய், தன் மனைவியை பற்றி உருகி உருகி எழுதி இருக்கும் விஷயத்தை எல்லாம் படித்தார்.
மகாநதி:
இதை பார்த்து காவிரிக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. பின் அந்த டைரியை காவிரி யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டார். பின் காவிரியை விஜய் வீட்டில் விட்டு வந்தார். அப்போது காவிரி, விஜய்யின் மனைவியை பற்றி பேசி கொண்டு இருந்தார். அதற்குப்பின் காவிரி வீட்டில் சகோதரிகள் சந்தோஷமாக சாப்பிட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது நிவின் வருகிறார். நிவின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரி வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாரதா, இதை தன்னுடைய கணவர் பார்த்தால் சந்தோஷப்படுவார் என்று வருத்தப்படுகிறார். உடனே அவருடைய மகள்கள் எல்லோருமே சாரதாவிற்கு ஆறுதல் சொல்லி சமாதானம்
செய்கிறார்கள். அதற்குப்பின் காவிரியிடம் கங்கா, விஜய் திருமணம் செய்து கொள்வதை பற்றி கேட்கிறார். காவிரி முடியாது என்று மறுத்து விடுகிறார். பின் கங்கா, யமுனா, நர்மதா மூவருமே விஜய்- காவேரி இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் நிவின், விஜயின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு நிவின், காவிரியின் குழந்தையை பார்த்து எமோஷனல் ஆகிறார். அதற்குப்பின் நிவின், விஜய் இருவரும் சந்தோஷமாக குடித்துக்கொண்டு பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிவின், ஆரம்பத்தில் என்னுடைய கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சீக்கிரத்திலேயே உங்களையும் காவிரியையும் சேர்த்து வைப்போம் என்றெல்லாம் சொல்கிறார். விஜய்யும் சந்தோஷப்படுகிறார்.