சாரதாவின் வீட்டை மீட்டு வெற்றி வாகை சூடினாரா விஜய்? கோபத்தில் காவிரி - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சாரதாவிற்கு சுளுக்கு எடுத்துவிட்டு நன்றாக நடக்க வைத்தார். விஜய் செய்த செயலை பார்த்து சாரதா கண்கலங்கி விட்டார். அதற்குப்பின் நிவின்,விஜய், குமரன் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய் கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது மீட்டு அத்தை இடம் தர வேண்டும். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம்
என்றெல்லாம் சொன்னார்.
இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விட்டார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் நிவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்.
மகாநதி:
சாரதா, விஜய், காவிரி மூவருமே நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய்- குமரன் இருவருமே தனியாக நின்று பேசுவதை பார்த்து கங்கா கோபப்பட்டார். அதைப்பற்றி கங்கா, காவிரியிடமும் கேட்டார். ஆனால், காவேரி எதுவும் தெரியாது என்றார். இன்னொரு பக்கம் ராகவை நிவின் அம்மா அழைத்து வந்தார். அப்போது நிவின் தன்னுடைய அம்மாவை வேறு ஒரு காரில் அனுப்பி ராகவை தூக்கி விட்டார். விஜய் இருக்கும் இடத்திற்கு ராகவை அழைத்துக் கொண்டு நிவின்-குமரன் இருவருமே வந்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் ராகவ் போன் செய்யவில்லை என்று பசுபதி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிவின், பசுபதிக்கு போன் செய்து ராகவை கடத்திய விஷயத்தை சொன்னார். இதனால் பசுபதி பயங்கரமாக கோபப்பட்டு கத்தினார். உடனே விஜய், காவிரி குடும்பத்திற்கு நீ பிரச்சனை தரக்கூடாது என்று சொல்லியும் நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார். ஒழுங்கு மரியாதையாக கொடைக்கானல் பத்திரத்தை நீ எடுத்துக்கொண்டு சென்னைக்கு வரவேண்டும் இல்லை என்றால் உன் மகனை என்ன செய்வோம் என்று எங்களுக்கே தெரியாது என்றார். இதனால் பசுபதி ரொம்பவே பதறிப் போனார்.
https://www.youtube.com/watch?v=Hz5NFxR9imI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமாவில் பசுபதி, சாரதாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது விஜய் ஃபோனில், நான் சொல்வதைப் போலவே காவேரி வீட்டில் சொல்கிறார். பசுபதி அதே போல் செய்கிறார்.
போலி பத்திரத்தை கிழித்து போட்டு கொடைக்கானலில் இருக்கும் வீட்டின் ஒரிஜினல் பத்திரத்தை பசுபதி கொடுக்கிறார். இதை பார்த்த காவிரி, கோபத்தில் பசுபதியை அடிக்கிறார். பின் சாரதாவின் காலில் பசுபதி விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இது எல்லாம் பார்த்து சாரதாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பத்திரத்தை மீட்டதை நினைத்து விஜய் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.