பசுபதி செய்த வேலையை சொன்ன குமரன், ஆத்திரத்தில் கொந்தளிக்கும் காவிரி குடும்பம் - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 16/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் குமரன், காவிரிக்கு போன் செய்து ஹாஸ்பிடலில் நடந்ததை எல்லாம் சொன்னார். பசுபதி தான் வெண்ணிலாவைமாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார் என்று உண்மையும் சொல்லி, அதை போனில் ரெக்கார்ட் செய்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும்போதே குமரனின் பைக் மீது பசுபதி மோதி விட்டார். இதனால் குமரன் கீழே விழுந்து விடுவதால் போனும் கீழே போய் விழுந்தது. உடனே பசுபதி, குமரனின் போனை உடைத்து விட்டார். இன்னொரு பக்கம் காவிரி, இந்த உண்மையை விஜய்க்கு போன் செய்து சொன்னார். விஜய்யும் அதிர்ச்சியானார். அதற்குப்பின் குமரன், நிவின், காவிரி மூவருமே சந்தித்து பேசி இருந்தார்கள்.

அப்போது நிவின், நாங்கள் பசுபதியை பார்த்து கொள்கிறோம் என்று காவிரியை அனுப்பி விட்டார்கள். ஹாஸ்பிடலில் பசுபதியும், வெண்ணிலாவின் மாமாவையும் பற்றி விசாரித்தார்கள். ஆனால், அவர்கள் யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டதாக சொன்னார்கள். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் நிவின்- குமரன் இருவரும் புலம்பி இருந்தார்கள். பின் இதை அறிந்த காவிரி, விஜய்யிடம் தகவலை சொன்னார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு விஜய் வந்தார். ஆனால், பசுபதி வீட்டிலேயே இல்லை. அப்போது போன் செய்த காவிரி, தயவுசெய்து அங்கிருந்து கிளம்புங்கள். போலீஸ் பிடித்து விடப் போகிறார்கள் என்று பயப்பட்டார். விஜய், எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஆறுதல் சொன்னார்.

மகாநதி சீரியல்:

வீட்டில் எல்லோருமே குமரனுக்கு அடிபட்டிருப்பதை பார்த்து பயந்து விட்டார்கள். குமரன், பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக பொய் சொல்லி இருந்தார். அதற்குப்பின் கடையிலிருந்து குமரனுக்கு போன் வர, அதைக் கேட்டவுடன் குமரன் பதறி கொண்டு தன்னுடைய துணிக்கடைக்கு போய் பார்த்தார். அங்கு அவருடைய கடையை அடித்து நொறுக்கி இருந்தார்கள். பின் இதை குமரன், நிவினிடம் சொல்ல, அவரும் வந்து விட்டார். அதிர்ச்சியில் நிவின், இது பசுபதி செய்த வேலைதான் என்று சொன்னார். குமரன் மனமுடைந்து அழுதார். அதற்குப்பின் குமரன் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால், உண்மையை மறைத்து விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் காவிரி, நிவினுக்கு போன் செய்து என்ன நடந்தது? என்று விசாரித்தார். அப்போது நிவின், கடையை அடித்து நொறுக்கிய விஷயத்தை சொன்னவுடன் காவிரி வருத்தப்பட்டார். நிவின் ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தார். இதை பார்த்த யமுனா, வழக்கம் போல் நிவின், காவிரியை சந்தேகப்பட்டு சண்டை வாங்கி இருந்தார். பின் காவிரி இதையெல்லாம் விஜயிடம் சொன்னார். மறுநாள் காலையில் குமரன் கடைக்கு போனார். அங்கு நிவின்- குமரன் இருவருமே கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த விஜய் கடையை பார்த்து ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், என்னானது? யார் செய்த வேலை? என்று கேட்கிறார். அப்போது குமரன், இது பசுபதி செய்தவேலைதான் என்று சொல்கிறார். உடனே விஜய், என்னால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது என்று எமோஷனாக பேசுகிறார். அதற்கு குமரன், எங்களால்தான் உங்களுக்கு பிரச்சனை என்று இருவருமே மாற்றி மாற்றி பேசிக்கொள்கிறார்கள். பின் நிவின், விஜய், குமரன் மூவருமே பசுபதியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். விஜய் சென்ற பிறகு கங்கா, காவிரி இருவருமே கடைக்கு வருகிறார்கள். கடையை பார்த்து கங்கா கதறி அழுகிறார். குமரன், காவிரி இருவருமே சமாதானம் செய்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது யார் செய்தது? என்று கங்கா கேட்க, நடந்த உண்மை எல்லாத்தையும் குமரன் சொல்லிவிடுகிறார். அதற்குப்பின் பசுபதி போன் செய்து குமரனை வெறுப்பேற்றுகிறார். குமரன், காவேரி, நிவின் மூவருமே மாற்றி மாற்றி பசுபதி இடம் பேசுகிறார்கள். எப்படியாவது பசுபதியை பிடிக்க வேண்டும் என்று காவிரி சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த குமரனிடம் விசாரிகள். அப்போது கங்கா கடையில் நடந்த எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார். இதனால் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full