சந்தானத்தின் வீட்டை சொந்தமாக சதி வேலை செய்யும் பசுபதி, காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி

By subhashini · 11/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோபத்தில் பசுபதி, காவேரிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால் நான் எதற்காக விஜய்க்கு தொல்லை தருவேன் என்றார். உடனே விஜய் பாட்டி, காவிரிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து என் பேரனை தொந்தரவு செய்யாதே என்று சொன்னார். இதையெல்லாம் கேட்ட விஜய் கோபத்தில் பசுபதியை எட்டி உதைத்து வெளுத்து வாங்கி இருந்தார். தடுக்க வந்த ராகினியை தள்ளி விட்டார். பின் விஜய், நான் ஏன் காவிரியை மறக்கனும் என்று மிரட்டி வெளியே அனுப்பி விட்டார்.

விஜய், நீங்கள் எதற்காக பசுபதி இடம் காவிரி இங்கு வரமாட்டாள் என்று சொன்னீர்கள். நான் காவிரி உடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்றார். உடன் பாட்டி உண்மையை சொல்ல வர உடனே சித்தி தடுத்து நிறுத்தி, பசுபதியை இங்கிருந்து அனுப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சமாளித்து விட்டார். அதற்குப்பின் விஜய் சென்ற பிறகு பாட்டி, காவிரி இந்த வீட்டிற்கு தேவை இல்லை. விஜய்யின் வாழ்க்கையை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று பேச, தாத்தாவிற்கு கோபம் வருகிறது. அதற்குப்பின் குமரனை சந்தித்து விஜய் பேசி இருந்தார். அப்போது பசுபதி வந்த விஷயத்தை எல்லாம் விஜய் சொன்னார்.

மகாநதி:

உடனே குமரன், இங்கேயும் பசுபதி வந்தான். பெரிய பிரச்சினையாகிவிட்டது என்று சொன்னார். பின் விஜய், காவிரி எதற்காக இப்படி செய்தார். எனக்கு என்ன செய்வது இப்படி புரியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார். குமரன், உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு சென்ற விஜய், காவிரியை மிரட்டியதற்காக சண்டை போட்டார். பசுபதியுமே பதிலுக்கு பதில் கொடுத்தார். கடைசியில் கோவப்பட்ட விஜய், பசுபதியின் கையை முறுக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

கடந்த வாரம் எபிசோட்:

பசுபதியால் காவேரி குடும்பத்திற்கு பிரச்சினை வரும் என்று அவர்கள் வீட்டிற்கு வெளியேயே விஜய் காவல் காத்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரியை பார்த்து விஜய், என்னதான் பிரச்சனை? எதற்காக என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்? உண்மையை சொல்ல வந்தும் ஏன் தடுத்தாய்? என்று கேட்டார். ஆனால், காவிரியால் உண்மையை சொல்ல முடியாமல் பசுபதியால் உங்களுக்கு பிரச்சனை வேண்டாம். அதனால் தான் நான் ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்னார். பின் காவிரியின் வயிற்றில் கையை வைத்து தன் குழந்தையிடம் கொஞ்சினார் விஜய்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் விஜய், நீ சீக்கிரம் என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று நம்புகிறேன் என்றார். காவிரியால் விஜயின் அன்பை விலக்கி வைக்க முடியவில்லை. அதற்குப்பின் காவேரி அம்மா, சொந்தக்காரர் ஒருவரின் விசேஷத்திற்கு கொடைக்கானல் சென்று இருந்தார். அப்போது கங்காவிற்கு ஃபோன் செய்த அவருடைய அம்மா, பசுபதி நம்முடைய வீட்டை அவனுடையது என்று சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறான் என்று புலம்பி அழுதார். உடனே குமரன், காவேரி, கங்கா, பாட்டி எல்லோருமே கொடைக்கானல் கிளம்பினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பசுபதி, தங்களுடைய வீட்டை அபகரிக்கிறான் என்ற விஷயம் தெரிந்து ராகினி, நிவினிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பசுபதி, சந்தானத்தின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அராஜகம் செய்து கொண்டிருக்கிறார். உன் புருஷன் 10 லட்சம் ரூபாய் கடன் தரணும். அதனால் இந்த வீடு என்னுடையது என்கிறார். காவிரி அம்மா, என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டிருக்கிறார். பின் காவேரி அங்கு வந்து விடுகிறார். அப்போது பசுபதி, சந்தானம் கையெழுத்து போட்ட டாக்குமெண்ட்டை கொடுக்கிறார். கோபத்தில் காவிரி டாக்குமெண்ட்டை தூக்கிப்போடுகிறார். பின் குமரன், காவேரி எல்லோருமே சேர்ந்து பசுபதியும் அவருடைய ஆட்களையும் அடிக்கிறார்கள். அந்த இடத்திற்கு போலீஸ் வந்துவிடுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full