வீட்டை அபகரித்து கொண்டு அராஜகம் செய்யும் பசுபதி, கொந்தளிக்கும் காவிரி - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 14/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் போலீஸ், டாக்குமெண்டில் உங்கள் கணவர் கையெழுத்து போட்டு பணம் வாங்கியது போல் தான் இருக்கிறது. நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசிக் கொள்ளுங்கள். இங்கு இருந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள். ஒழுங்கு மரியாதையாக இரண்டு பேருமே கிளம்புங்கள் என்று சொன்னார். இதனால் வேறு வழி இல்லாமல் காவிரி அமைதியாகி விட்டார். பசுபதி அந்த வீட்டை எழுதி வாங்கியே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தார். இன்னொரு பக்கம் நிவினை சந்தித்து விஜய் பேசி இருந்தார். அப்போது விஜய், எதற்காக காவிரி இப்படி முடிவு எடுத்தால் என்று தெரியவில்லை.

என் பாட்டி சொன்னதால் இப்படி செய்கிறாளா? என்ன காரணம் என்று யோசிக்கவே முடியவில்லை. அவள் எதற்காக இப்படி செய்தால் என்று தெரிந்தால் நான் அதை சரி செய்ய செய்வேன். இன்னும் ஒரு நாள் தான் பார்ப்பேன். காவிரி வரவில்லை என்றால் நான் அவரை என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று சொன்னார். பின் நிவின், காவிரி இங்கு இல்லை. கொடைக்கானல் சென்று இருக்கிறார். பசுபதி அவர்களுடைய வீட்டை தரமாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இதைக்கேட்டு விஜய்க்கு பயங்கர கோபம் வந்தது.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் விஜய், நான் இப்பவே கொடைக்கானல் போகிறேன். அந்த பசுபதியை சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்தார். உடனே விஜயை தடுத்து நிறுத்தி விட்டார் நிவின். இன்னொரு பக்கம் பசுபதி ஒரு நாள் தங்குவதற்கு வீட்டில் அனுமதி தந்ததால் காவேரியின் அம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் அழுது கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நிவின் இல்லாத சமயம் பார்த்து யமுனா, நீங்கள் எப்படியாவது காவிரியை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள். நிவின், காவிரியை இன்னும் மறக்கவில்லை. காவிரியும் நிவினை தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று எபிசோட்:

அதனால் தான் அவள் உங்களுடன் வர மறுக்கிறார் என்று ரொம்ப மோசமாக பேசினார். இதைக் கேட்டு சிரித்த விஜய், உனக்கு ஏன் இவ்வளவு அசிங்கமான புத்தி இருக்கிறது. நிவினை பற்றியும், என் பொண்டாட்டி பற்றியும் தெரியும். நீ தேவையில்லாமல் அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்து என்று திட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பசுபதி, காவிரி குடும்பத்திடம் ரவுடிகளை வைத்து பிரச்சனை செய்தார். இதனால் கோபத்தில் காவிரி கத்தியை வைத்து எல்லோரையுமே மிரட்டி வீட்டை விட்டு அனுப்பினார். அந்த சமயம் வந்த போலீஸ், காவிரியை திட்டினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பசுபதி, இந்த வீட்டை எழுதி வைக்க சொல்லுங்கள், இல்லையென்றால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார். போலீஸ்மே பசுபதிக்கு சாதகமாக தான் பேசுகிறார். காவிரியிடம் பணத்தை கொடுப்பதற்காக அவகாசம் கேட்கிறார்கள். காவிரி, நாங்கள் கடன் வாங்கவில்லை. பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் பசுபதி- காவிரிக்கு இடையே வாக்குவாதம் அதிகமாகவதால் காவிரியின் பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பின் உடனடியாக அவரை ஹாஸ்பிட்டலில் சேர்க்கிறார்கள். அப்போது டாக்டர், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் தான் மயக்கம் வந்தது. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் கோபப்பட்ட காவிரி, பசுபதியை கொன்று விடலாம் என்று ஹாஸ்பிடலில் இருந்து வேக வேகமாக கிளம்பி வருகிறாள். உடனே காவிரி அம்மா, தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு பசுபதி, வீட்டில் இருந்து எல்லா பொருள்களையும் எடுத்து வெளியே போட்டு வைத்திருக்கிறார். அதோடு . வீட்டு பாத்திரத்த்தையும் பசுபதி திருடி விடுகிறார்.
இதனால் காவிரி அம்மா ரொம்பவே மனமுடைந்து விடுகிறார். பின் பசுபதி, டாக்குமெண்ட் தான் இல்லாமல் இருந்தது. இந்த வீடு எனக்கு தான் ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து கிளம்புங்கள் என்று மிரட்டுகிறார். என்ன செய்வதென்று புரியாமல் காவிரி தவித்து நிற்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full