பசுபதி கொடுத்த பிரச்சனையால் கொடைக்கானல் செல்லும் காவிரி குடும்பம் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் பாட்டி, காவிரியால் தான் எல்லா பிரச்சனையும் வந்தது. அவளை விட்டு நீ உன்னுடைய வாழ்க்கையை பார் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். அப்போது விஜயின் சித்தி, பசுபதி நாளை ஜாமினில் வெளியே வருகிறார் என்ற விஷயத்தை சொன்னார். இதனால் கோபப்பட்ட விஜய், அவனை நான் சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்தார். இதனால் விஜய்யின் பாட்டி திட்டி இருந்தார். அதற்குப்பின் ஜாமினில் வெளியேவந்த பசுபதி நேராக காவிரியின் வீட்டிற்கு தான் வந்தார். அங்கு காவிரியின் அம்மாவிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார் பசுபதி.
பசுபதி, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன். எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து செய்கிறேன் என்றெல்லாம் பயமுறுத்துவது போல் பேசி இருந்தார். உடனே கோபத்தில் காவிரி, பசுபதியை தீட்டு விட்டு உன்னை முடித்துவிட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று ஆவேசப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே காவிரியை தடுத்து விட்டார்கள். பசுபதியும், காவிரியிடம் சவால் விட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷன் என்ற காவிரி, பசுபதியை எப்படி வெளியில் விட்டீர்கள். அவன் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறான் என்றெல்லாம் கோபப்பட்டார். உடனே போலீஸ், நீங்கள் புகார் கொடுத்து விட்டு போங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு சென்ற பசுபதி, காவேரிக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொன்னால் நான் எதற்காக விஜய்க்கு தொல்லை தருவேன் என்றார். உடனே பாட்டி, இனி காவிரிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து என் பேரனை தொந்தரவு செய்யாதே என்று சொன்னார். பசுபதி, இந்த வார்த்தையை உங்கள் பேரன் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நான் கிளம்பி விடுவேன் என்றார். இதையெல்லாம் கேட்ட விஜய் கோபத்தில் பசுபதியை எட்டி உதைத்து வெளுத்து வாங்கி இருந்தார். தடுக்க வந்த ராகினியை தள்ளி விட்டார். பின் விஜய், நான் ஏன் காவிரியை மறக்கனும் என்று மிரட்டி வெளியே அனுப்பி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் விஜய், நீங்கள் எதற்காக பசுபதி இடம் காவிரி இங்கு வரமாட்டாள் என்று சொன்னீர்கள். நான் காவிரி உடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்கிறார். அதற்கு பாட்டி உண்மையை சொல்ல வர உடனே சித்தி தடுத்து நிறுத்தி, பசுபதியை இங்கிருந்து அனுப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சமாளித்து விடுகிறார். அதற்குப்பின் விஜய் சென்ற பிறகு பாட்டி, காவிரி இந்த வீட்டிற்கு தேவை இல்லை. விஜய்யின் வாழ்க்கையை நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று பேச, தாத்தாவிற்கு கோபம் வருகிறது.
அதற்குப்பின் குமரனை சந்தித்து விஜய் பேசுகிறார். அப்போது பசுபதி வந்த விஷயத்தை எல்லாம் விஜய் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே குமரன், இங்கேயும் பசுபதி வந்தான். பெரிய பிரச்சினையாகிவிட்டது என்று சொல்கிறார். பின் விஜய், காவிரி எதற்காக இப்படி செய்கிறார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை என்று ரொம்ப வருத்தப்படுகிறார். குமரன், உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். அதற்குப்பின் பசுபதி வீட்டிற்கு சென்ற விஜய், காவிரியை மிரட்டியதற்காக சண்டை போடுகிறார். பசுபதியுமே பதிலுக்கு பதில் கொடுக்கிறார். கடைசியில் கோவப்பட்ட விஜய், பசுபதியின் கையை முறுக்கி மிரட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பசுபதி காவிரிக்கு பிரச்சினையை கொடுக்க நினைக்கிறார். அந்த வகையில் கங்காவிற்கு போன் செய்த காவிரியின் அம்மா, கொடைக்கானலில் இருக்கும் நம்முடைய வீட்டை பசுபதி தன்னுடையது என்று சொல்லி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று அழுகிறார். இதை கேட்ட காவேரி, குமரன், கங்கா எல்லோருமே கொடைக்கானலுக்கு கிளம்புகிறார்கள்.