காவிரியின் வளைகாப்பை பற்றி பேசும் விஜய் தாத்தா, குறை சொல்லும் பாட்டி - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஹாஸ்பிடலுக்கு வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போயிட்டு வாருங்கள் என்று சொல்வதால் கங்காவும் அமைதியாக ஒத்துக் கொண்டார். ஆனால் விஜய், காவிரியின் ஸ்கேன் நினைத்து வருத்தப்பட்டார். இதை அறிந்த காவிரி அம்மா,என்ன ஆச்சு என்று விசாரித்தார். அப்போது விஜய், அம்மை வந்திருந்ததால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது என்று புலம்பி இருந்தார். அதற்கு சாரதா ஆறுதல் சொன்னார்.
நேற்று எபிசோட்டில் விஜய் இன்டர்வியூக்காக ஒரு கம்பெனிக்கு கிளம்ப தயாராக இருந்தார். அப்போது காவிரி அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி இருந்தார். பின் சாரதா, விஜய் வெளியே கிளம்புவதை பற்றி கேட்டார். அதற்கு காவிரி, நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் விஜய் வேலைக்கு செல்ல நினைத்தார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பினார். இன்னொரு பக்கம் கங்கா, குழந்தை பிறப்பது தொடர்பான வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
மகாநதி:
நெருக்கமான உறவில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று வீடியோவில் சொன்னார்கள். இதை கேட்டு கங்கா ரொம்பவே எமோஷனல் ஆனார். இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி கங்கா புலம்பி இருந்தார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கங்காவிற்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால் கங்காவின் மனது ஏற்றுக்கொள்ளவில்லை. குமரனும் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கங்கா குமரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவிரி, வேலைக்குப் போன விஷயத்தைப் பற்றி கேட்கிறார். அதற்கு விஜய், வேறு இடம் எங்காவது பார்க்கலாம் என்கிறார். உடனே காவிரி, புது பிசினஸ் தொடங்கலாம். அதற்கான பணத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார். ஆனால், விஜய் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த சமயம் வந்த குமரன், கங்கா என்னை ரொம்ப டார்ச்சல் செய்கிறார். அடிக்கிறார், உதைக்கிறார் என்றெல்லாம் புலம்புகிறார். உடனே விஜய், காவிரியுமே அப்படிதான் ரொம்ப கொடூரமாக என்னை நடத்துவாள் என்றெல்லாம் புலம்புகிறார். பின் காவிரி- விஜய் செல்ல சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் விஜய்யை பார்ப்பதற்காக அவருடைய தாத்தா- பாட்டி இருவரும் வந்திருக்கிறார்கள். பாட்டி, காவிரி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. வழக்கம் போல காவிரியை குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். பின் தாத்தா, காவிரிக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்கிறார்கள். பின் பாட்டி, உனக்கு காவிரி தான் முக்கியமா? நாங்கள் இல்லையா? என்றெல்லாம் வழக்கம் போல காவிரியை திட்டிக் கொண்டிருக்கிறார். விஜய், தன் பாட்டியை சமாதானம் செய்ய நினைக்கிறார். ஆனால், அவர் கேட்கவில்லை. பின் இருவருமே அங்கிருந்து கிளம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.