போலீசில் விஜயை மாட்டிவிட்ட யமுனா, உண்மை அறிந்து கொந்தளித்த காவிரி - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 6/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் இன்றைய எபிசோட்டில் காவிரி- கங்கா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கங்கா, நீ என்னதான் யோசிக்கிறாய்? விஜய் உடன் சேர்ந்து வாழ நினைக்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் குமரன், மிஷின் வாங்குவதற்காக என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து விஜய்யின் பிஏ, மெஷின்களை எல்லாம் கொடுத்து விஜய் இடம் போனில் பேச வைக்கிறார். அதற்கு குமரன், வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு விஜய், எல்லாம் ஒரு குடும்பம் தான்.

நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற பாருங்கள் என்று சொல்கிறார். அதற்கு பின் வந்த நிவின் இடம் நடந்தது எல்லாம் குமரன் சொல்கிறார். அப்போது இருவருமே விஜய்- காவிரி சேர்ந்து வாழ வேண்டும். அதற்கான முயற்சியை நாம் செய்யலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் விஜய்யை பார்க்க காவிரி போகிறார். அப்போது காவேரி, நீங்கள் நிவினிடம் என்ன கேட்க போகிறீர்கள்? என்னதான் பிளான் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த லாயர், போலீஸ் அங்கு வர இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் என்று சொல்கிறார். அதனால் காவிரி ரொம்பவே பதறுகிறார். ரூமின் கதவை வெளி கதவை பூட்டி விடுகிறார்.

மகாநதி:

இன்னொரு பக்கம் நிவின், விஜயை பார்க்க கிளம்புகிறார். உடனே யமுனா, காவேரி பார்க்கப் போகிறீர்களா? என்று சண்டை வாங்கினார். ஆனால், நிவின் திட்டிவிட்டு செல்கிறார். இருந்தாலும் விடாமல் நிவினை பாலோ பண்ணி போனார் யமுனா. பின் நிவின்- காவிரி இருவருமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யமுனா பயங்கரமாக கோபப்படுகிறார். அதற்குப்பின் போலீஸ் வரவில்லை என்று தெரிந்தவுடன் காவிரி- நிவின் இருவருமே உள்ளே போகிறார்கள். அங்கிருந்து யமுனாவும் கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் விஜய், ராகினி உன்னுடைய மாமா பொண்ணு.

நிவின்-யமுனா சண்டை:

அதனால் நீ ரோகினியிடம் உறவினர் என்ற முறையில் பேசி பசுபதி இருக்கும் இடத்தை பற்றி அறிந்து சொல்வாயா என்று கேட்கிறார். அதற்கு நிவின், என்னால் முடியும் என்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிவினிடம், யமுனா வழக்கம் போல சண்டை வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது நிவின், நான் விஜய்யிடம் பேச போனேன். காவிரியை பழிவாங்க தான் பசுபதி, விஜயை மாட்டி விட்டிருக்கிறான். அதற்காக தான் உதவி செய்யபோனேன். அந்த இடத்திற்கு காவிரி வந்தார் என்று என்று சொல்கிறார். மற்றபடி நீ சொல்வது போல் ஒன்றுமே இல்லை என்று சொல்கிறார். ஆனால், அதை யமுனாவால் ஏற்றுக்கொள்ளவே இல்லை. யமுனாவிற்கு நிவின்- காவிரி மீது சந்தேகமாக இருக்கிறது. இதனால் விஜய் இருக்கும் இடத்தை போலீசிற்கு ஃபோன் செய்து சொல்லிவிடுகிறார் யமுனா,

விஜய் கைது:

போலீசுமே விஜய் இருக்க இடம் இடத்திற்கு சென்று விடுகிறார்கள். அப்போது விஜய் எவ்வளவோ சொல்லி பார்க்கிறார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. அதிரடியாக போலீஸ் விஜயை கைது செய்து கொண்டு செல்கிறது. இந்த உண்மை அறிந்து குமரன் வீட்டில் சொல்கிறார். இதை கேட்டவுடன் ரொம்பவே வருத்தப்பட்டு கதறி அழுகிறார் காவிரி. பின் நிவினுக்கு போன் செய்த காவிரி, விஜயை கைது செய்து விட்டார்கள். எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்கிறார். நிவின், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் வேதனையில் காவேரி வீட்டில் இருக்கிறார்.

யமுனா-காவிரி சண்டை:

அந்த சமயம் வந்த யமுனா, கங்காவிடம் விஜயை கைது செய்து விட்டார்களே, காவிரி வருத்தப்படுகிறாரா? என்று நக்கலாக பேசுகிறார். கங்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது யமுனா, நான்தான் விஜயை போலீசிடம் மாட்டி விட்டேன் என்று சொன்னவுடன் கங்கா- காவிரி இருவருமே ஷாக் ஆகிறார்கள். எதற்காக இப்படி செய்தாய் என்று கங்கா கேட்கிறார். அதற்கு யமுனா, நிவின்-காவிரி இருவருமே காதலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் வாழ்க்கை பறிப்போகிறது. அதனால் தான் நான் இப்படி செய்தேன். காவிரி, விஜய் உடன் வாழ வேண்டியது என்றால் நிவனுடன் எதுக்கு பேசனும். இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுத்துகிறார்கள் என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்ட காவிரி, யமுனாவை அடித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பின் கங்கா, நீ பேசுவது சரியே இல்லை. காவிரியின் கேரக்டரை பற்றி நீ பேசுவதற்கு தகுதியே இல்லை என்று திட்டி விட்டு செல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full