கிருஷ்ணா காண்பித்த ஆதாரத்தால் ஆடிப்போன காவிரி குடும்பம், விஜய் என்ன செய்யப் போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தி,நாங்கள் சாப்பிட்ட மிச்சம் மீதி தான் நீ சாப்பிட வேண்டும். உனக்கு கிச்சனில் வர அனுமதி இல்லை என்று சிந்துவை மோசமாக திட்டி வெளிய அனுப்பி விட்டார். இதனால் மனமடைந்து சிந்து வெளியே அழுது கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த காவேரி, சிந்துவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதற்குப்பின் காவிரி-கங்கா, சிந்துவிடம் தன்னுடைய அப்பாவை பற்றியும் திருமணமான கதையை பற்றி எல்லாம் கேட்டு ஷாக் ஆனார்கள்.
சிந்து சொன்ன விஷயத்தால் கடுப்பான கங்கா எல்லாத்தையும் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். சாரதாவிற்கு கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த கிருஷ்ணா, சொத்தில் சரி பாதி கொடுக்க வேண்டும். ஒரு பங்கு எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். உடனே விஜய், அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்புங்கள். நீங்கள் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு கிருஷ்ணா, நான் எதற்காக போனோம். என்னால் போக முடியாது என்றார்.
மகாநதி:
இதனால் கோபப்பட்ட காவிரி, கிருஷ்ணாவிடம் சண்டைக்கு போனார். பின் விஜயின் தாத்தா, பாட்டி இருவருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார். இதனால் விஜய் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து சொத்தில் ஒரு பங்கு தருகிறோம். இல்லை என்றால் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு முத்து மலர், நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்கான பங்கை கொடுத்து விடுங்கள். நாங்கள் கிளம்பி விடுகிறோம் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார். ஆனால், அவர்கள் போக முடியாது என்று வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் கொந்தளித்த விஜயின் சித்தப்பா, முத்துமலரை பிடித்து தள்ளுகிறார். இதனால் வீட்டில் பெரிய கலவரமே வருகிறது. பின் விஜய் போலீசுக்கு போன் செய்து வரவைக்கிறார். விஜயின் வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துமலர் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு கிருஷ்ணா, நாங்கள் சொத்தில் சரி பாதி தான் கேட்கிறோம். நாங்கள் எந்த பிரச்சினையும் செய்யவில்லை என்று சொல்கிறார். அதற்கு போலீஸ், இவர்தான் சந்தானத்தின் மனைவி என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவின் திருமண பதிவை காண்பிக்கிறார். இதை பார்த்து சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் போலீஸ் சாரதாவிடம் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு சாரதா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று சொல்கிறார். அப்போ சட்டப்படி முத்துமலர் தான் சந்தானத்தின் மனைவி என்று போலீஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதனால் சாரதாவின் குடும்பத்திற்கு தலை மேல் இடி விழுகிறது. கிருஷ்ணா தன்னுடைய அம்மா, தங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார். விஜய் கோபத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.