சொத்தில் பங்கு கேட்டு வெடிக்கும் கலவரம், போலீஸ் நடத்தும் அதிரடி விசாரணை, அடுத்து என்ன? மகாநதி

By subhashini · 12/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, இதுதான் என்னுடைய முடிவு. விருப்பம் இருந்தால் வீட்டை விற்கலாம் இல்லை என்றால் முடியாது என்றார். இதனால் கங்கா, யமுனாவில் எதுவுமே பேச முடியவில்லை. கடைசியில் காவிரிக்கு விற்க ஒத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் எல்லோருமே கொடைக்கானல் வீட்டிற்கு கிளம்பினார்கள். கங்கா தன்னுடன் குமரன் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். பின் ஒரு வழியாக எல்லோருமே கொடைக்கானல் சென்று விட்டார்கள். அங்கு சந்தானத்தை பற்றி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.

கங்கா, யமுனா இருவருமே வேண்டுமென்று காவிரியிடம் வம்பு இழுத்தார்கள். காவிரியும் பொறுமையாக இருந்தார். இருந்தாலுமே காவிரியை வெறுப்பேற்றும் மாதிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபப்பட்டு சாரதா, கங்காவை திட்டினார். அடுத்த நாள் காலையில் எல்லோருமே தயாராகி ரெஜிஸ்டர் ஆபிஸ் கிளம்பினார்கள். அந்த சமயம் பார்த்து புதிதாக ஒரு குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்தார்கள். சாரதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது வீட்டுக்குள் வந்த நபர், எல்லோருடைய பெயரையும் சொல்லி நலம் விசாரித்தார்.

மகாநதி:

வீட்டில் எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. அப்போது அந்த நபர், நான்தான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி. அவர் கத்தாரில் வேலை செய்யும் போது தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். உங்களைப் பற்றி எல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார். ஆனால், எங்களை பற்றி உங்களிடம் சொல்லவில்லை. அதற்குள் அவர் தவறிவிட்டார் என்றார். இதை கேட்டு சாரதா குடும்பத்திற்கு இடிமேல் இடி விழுகிறது. சாரதா கோபப்பட்டு சண்டை போட்டார். காவிரி, போலீசை அழைப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். பின் அந்த நபரின் மகன், சந்தானம் தான் எங்கள் அப்பா என்பதற்கான ஆதாரம் காண்பிக்க, சாரதா குடும்பத்தில் எல்லோருமே உறைந்து போனார்கள்.

இன்றைய எபிசோட்:

காவேரி அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை . யமுனா, இதெல்லாம் போட்டோ எடிட்டிங் ஆக இருக்கும். நீங்கள் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள் என்றார். இரண்டாவது மனைவி முத்து மலரின் மகன்,
இந்த சொத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. என்னை மீறி வீட்டை விற்க முடியாது என்று சொல்கிறார். அப்போது விஜய், அதெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது என்று போலீசுக்கு போன் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து சாரதாவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பின் அந்த இடத்திற்கு போலீஸ் வந்து விசாரிக்கிறார்கள். அப்போது முத்து மலர், எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆகிறது.

சீரியல் ட்ராக்:

நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் பொய் என்று சாரதா- காவிரி சொல்கிறார்கள். இருந்தாலுமே விடாமல் முத்து மலர், அவரை நம்பி தான் இத்தனை நாட்களாக இருந்தோம். இப்போது எங்களுக்கு என்று யாரும் இல்லை. சொத்தை விற்பதாக தெரிந்தது. அதனால்தான் நாங்கள் பங்கு கேட்டு வந்தோம் என்று சொல்லி தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை எல்லாம் காண்பிக்கிறார்கள். போலீசுமே அதை பார்க்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full