விஜயை வலை வீசி தேடி அலையும் போலீஸ், காவிரி என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 5/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் நிவின், யமுனாவை அடித்ததை நினைத்து வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது கங்கா, அவள் வாய்க்கொழுப்பு அதனால்தான் அடித்திருப்பார் என்று உண்மையை சொன்னார். யமுனாவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி இருந்தார். குமரன், யமுனாவை அவருடைய வீட்டில் விட்டு நடந்ததை விசாரித்தார். அப்போது யமுனா, காவிரி- நிவினை பற்றி சேர்த்து வைத்து பேசினார். உடனே குமரன், அப்படியெல்லாம் யோசிக்காதே என்று அறிவுரை சொன்னார். அதற்கு பின் நிவினிடம் குமரன் பேசி இருந்தார். அப்போது நிவின், நான் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டார்.

அதற்குப்பின் குமரன், காவிரிக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது காவிரி-விஜய் உடன் இருப்பது குமரனுக்கு தெரிய வந்தது. பின் வீட்டில் குமரன், பொருட்காட்சியில் வேலை இருக்கிறது. அதனால் காலை தான் காவிரி வருவார் என்று ஏதேதோ சொல்லி சமாளித்து வந்தார். இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவருமே ரொம்ப சந்தோஷமாக காரில் பேசிக் கொண்டு வந்தார்கள். இன்னொரு பக்கம் வெண்ணிலா, பசுபதியையும் ராகினியையும் திட்டிக் கொண்டிருந்தார். உங்களால் தான் விஜய் என்னை தப்பாக புரிந்து கொண்டு வெறுக்கிறான் என்று கோபப்பட்டு திட்டி இருந்தார்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் வெண்ணிலா-பசுபதி இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபத்தில் பசுபதி, வெண்ணிலாவிடம் வீண் வம்பு வாங்கினார். பின் பசுபதி, வெண்ணிலாவை அடிக்க, அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆனார்கள். இன்னொரு பக்கம் காவிரியை வீட்டில் கொண்டு வந்து விட்டார் விஜய். அப்போது காவிரி அம்மா, எங்க போயிருந்தாய்? ஏன் இப்படி செய்கிறாய்? என்று அவரிடம் சண்டைக்கு போனார்.

நேற்று எபிசோட்:

குமரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் காவிரி அம்மா கேட்கவில்லை. இனிமேல் இப்படி செய்யாதே என்று காவிரியை திட்டினார். காவிரியால் எதுவுமே சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மாமா, அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பசுபதி இடம் கெஞ்சினார். பசுபதி, விஜயின் மீது பழி போடுவதற்கான வேலைகளை ஏற்பாடு செய்தார். நான் சொல்வதைப் போல் நீ சொல்லணும் என்று வெண்ணிலாவின் மாமாவையும் மிரட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வெண்ணிலாவை பற்றி விஜய், தாத்தா, பாட்டி எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த அவருடைய PA, வெண்ணிலா மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை சொல்கிறார். இதை கேட்டவுடன் விஜய் ஷாக் ஆகிறார். காதல் தோல்வியால் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக நியூஸ் சேனல்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்தவுடன் விஜய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் காவிரியிடம் இந்த தகவலை குமரன் சொல்கிறார். இதனால் காவிரி, விஜய்யை சந்திக்கப் போகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது விஜய், என்னை லாயர் தலைமறைவாக இருக்க சொல்கிறார். நான் என் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். இது இன்னொரு சிம். இதில் என்னிடம் பேசு. எதை பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார். அதனால் காவிரியும் தைரியமாக விஜய்யை அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் வி காவிரி வெண்ணிலாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு போகிறார். அங்கு வெண்ணிலா மாமாவிடம் விசாரிக்கிறார். ஆனால், அவர் உண்மையை சொன்னால் பசுபதி தன்னுடைய குடும்பத்தை ஏதாவது செய்து விடுவான் என்று பொய் சொல்கிறார். அந்த சமயம் பார்த்து போலீஸ் வருகிறார்கள். பின் காவிரியிடம் விஜய் எங்கே என்று விசாரிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full