காவிரி வீட்டை சோதனை செய்யும் போலீஸ், விஜய் சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் வெண்ணிலா-பசுபதி இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபத்தில் பசுபதி, வெண்ணிலாவிடம் வீண் வம்பு வாங்கினார். பின் பசுபதி, வெண்ணிலாவை அடிக்க, அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதை பார்த்து எல்லோருமே ஷாக் ஆனார்கள். இன்னொரு பக்கம் காவிரியை வீட்டில் கொண்டு வந்து விட்டார் விஜய். அப்போது காவிரி அம்மா, எங்க போயிருந்தாய்? ஏன் இப்படி செய்கிறாய்? என்று அவரிடம் சண்டைக்கு போனார்.
குமரன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் காவிரி அம்மா கேட்கவில்லை. இனிமேல் இப்படி செய்யாதே என்று காவிரியை திட்டினார். காவிரியால் எதுவுமே சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மாமா, அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பசுபதி இடம் கெஞ்சினார். பசுபதி, விஜயின் மீது பழி போடுவதற்கான வேலைகளை ஏற்பாடு செய்தார். நான் சொல்வதைப் போல் நீ சொல்லணும் என்று வெண்ணிலாவின் மாமாவையும் மிரட்டினார்.
மகாநதி சீரியல்:
நேற்று எபிசோட்டில் வெண்ணிலாவை பற்றி விஜய், தாத்தா, பாட்டி எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த அவருடைய PA, வெண்ணிலா மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை சொன்னார். இதை கேட்டவுடன் விஜய் ஷாக் ஆனார். காதல் தோல்வியால் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக நியூஸ் சேனல்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இதை பார்த்தவுடன் விஜய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் காவிரியிடம் இந்த தகவலை குமரன் சொன்னார். இதனால் காவிரி, விஜய்யை சந்திக்கப் போனார்.
நேற்று எபிசோட்:
அப்போது விஜய், என்னை லாயர் தலைமறைவாக இருக்க சொன்னார். நான் என் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். இது இன்னொரு சிம். இதில் என்னிடம் பேசு. எதை பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். அதனால் காவிரியும் தைரியமாக விஜய்யை அனுப்பி விட்டார். அதற்குப்பின் வி காவிரி வெண்ணிலாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு போனார். அங்கு வெண்ணிலா மாமாவிடம் விசாரித்தார். ஆனால், அவர் உண்மையை சொன்னால் பசுபதி தன்னுடைய குடும்பத்தை ஏதாவது செய்து விடுவான் என்று பொய் சொன்னார். அந்த சமயம் பார்த்து போலீஸ் வந்தார்கள். பின் காவிரியிடம் விஜய் எங்கே என்று விசாரித்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவிரியிடம் போலீஸ் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவிரி, எனக்கு விஜய் எங்கிருக்கிறார்? என்று தெரியாது என்கிறார். இருந்தும் விடாமல் போலீஸ் காவிரியின் வீட்டிற்க்கே சென்று சோதனை செய்கிறார்கள். அங்கு விஜய் இல்லை என்பதை தெரிந்தவுடன் போலீசார் எதுவும் பேச முடியவில்லை. பின் காவிரி வீட்டில் உள்ள எல்லோருமே போலீசிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். உடனே காவிரி, எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேசுகிறேன். தயவுசெய்து நீங்கள் கிளம்புங்கள் என்று அனுப்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் காவிரிக்கு போன் செய்த விஜய், கம்பெனியில் கொஞ்சம் பிரச்சனை. நீ நேரில் சென்று பார்க்கிறாயா? என்று சொல்கிறார். காவிரியுமே கம்பெனிக்கு சென்று விஜய் சொன்னது போல் எல்லா பிரச்சனையும் சரி செய்கிறார். அது மட்டும் இல்லாமல் கம்பெனியின் எல்லா முடிவிலும் பேங்க் அக்கவுண்டிலும் காவிரியின் பெயர் ஜாயின்ட் செய்திருப்பதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் கம்பெனியில் எல்லா வேலையும் முடித்துவிட்டு காவிரி வீட்டிற்கு வருகிறார். அப்போது காவிரியின் அம்மா, இவ்வளவு பெரிய ஆர்டரை எப்படி முடிப்பது? தயார் செய்ய இடமும் இல்லை என்று புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது