வெளிவந்த காவிரியின் ரகசியம், அதிர்ச்சியில் உறைந்த அம்மு - மகாநதி
உண்மையை அறிந்த அம்மு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா செய்த வேலையால் மாப்பிள்ளை கார்த்தி, திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் காவேரி பயங்கரமாக கோபப்பட்டார். அதோடு இதற்கு எல்லாம் காரணம் விஜய் தான் என நினைத்துக் கொண்டு சண்டை போட்டார். விஜய், எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார். இருந்தாலும் காவிரி நம்பவில்லை. காவிரி தன்னுடைய அம்மாவிடம் விஜய் சொன்னதை சொல்லி புலம்பி கொண்டிருந்தார். சாரதா அதற்கு சம்பந்தம் இல்லாதது போலவே அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், அம்முவை வேறு ஸ்கூலில் சேர்ப்பதை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
தாத்தா சோமு, காவிரி சொல்வதற்காக நீ அம்முவை எத்தனை ஸ்கூலில் மாற்ற முடியும்? அவளை நினைத்து பார் என்றார். பின் அம்முவிடம் விஜய், நீ காவேரி மிஸ்ஷிடம் ரொம்ப நெருங்கி பழகாதே. எல்லாம் ஸ்டுடென்ட் போலவே நீயும் டிஸ்டன்ஸ் ஓட இரு என்றார். அம்முவும் சரி என்றார். அதற்குப்பின் பள்ளிக்கூடத்திற்கு அம்மு வந்திருப்பதை பார்த்து காவிரி சந்தோஷப்பட்டார். காவிரி, அம்முவை கட்டி அணைத்து எமோஷனலாக அழுதார். ஆனால், அம்மு தன் தந்தை சொன்னதை நினைத்து பார்த்து நான் கிளம்புகிறேன் எனக்கு நேரம் ஆகிறது என்று காவேரியை விட்டு விலகி சென்றார். இதை பார்த்து காவிரிக்கு கஷ்டமாக இருக்கிறது.
மகாநதி:
நர்மதா பிரச்சனையில் இருப்பதை அறிந்து காவிரி-கங்கா வருத்தப்பட்டார். நர்மதாவை அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒருவர், காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்தார். இதனால் நர்மதா ரொம்பவே உடைந்து விட்டார். இந்த விஷயம் அறிந்து காவிரி வீட்டில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். சாரதா மட்டும் நர்மதாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் இதை அறிந்த விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று காவிரி குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.
சீரியல் ட்ராக்:
பின் நர்மதாவை காதலிக்கும் நபர் வீட்டிற்க்கே வந்து எல்லோரிடமும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வந்த விஜய், அந்த நபரை தனியாக ரூமுக்கு அழைத்து சென்று மிரட்டினார். அந்த நபர் பயந்து கொண்டு நர்மதாவிடமும் வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார். விஜய் செய்த உதவியை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். நர்மதா, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் சாரதா புரிந்து கொள்ளாததால் கோபப்பட்டு சண்டை போட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அம்மு, என்னுடைய அம்மாவும் காவிரி மிஸ்ஸும் ரெண்டு பெரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். யாழினி அவங்க சித்தின்னு சொல்கிறார். ராதா, ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் வேரு இல்லை. உன் அம்மா காவிரி மிஸ் தான்.