ராகவை கடத்திய மூன்று சகலைகள், பசுபதி என்ன செய்ய போகிறார்? பரபரப்பில் மகாநதி

By subhashini · 14/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, விஜய் தன்னுடைய வேலைக்காக ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால், சரியான பதில் கிடைக்காததால் குழப்பத்தில் இருந்தார். இதையெல்லாம் பார்த்த காவிரி ரொம்பவே வருத்தப்பட்டார். அதோடு காவேரி, விஜயின் பர்சில் பணம் வைத்தார். அதை அதை பார்த்த விஜய், என்னிடம் பணம் இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் நிவின் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின் நிவின் அம்மாவிடம் யமுனா பேசி இருந்தார்.

நிவின் அம்மா ஒவ்வொன்றுக்குமே பதிலடி கொடுத்தார். யமுனாவால் எதுவுமே பேசவில்லை. இன்னொரு பக்கம் குமரன் தன்னுடைய வேலையை செய்தார். ஆனால், விஜயால் குமரனை தன்னுடைய அம்மா மரியாதையாக நடத்தவில்லை என்று நினைத்துக் கொண்டு கங்கா கோபப்பட்டு குமரனிடமும் சண்டை வாங்கினார். அதற்கு குமரன், விஜய் புதிதாக வந்தவர். அதனால் தான் அத்தை கவனித்தார். நான் சின்ன வயதிலிருந்து அவர்களிடம் வளர்ந்தவன். நீ அதை எல்லாம் யோசிக்காதே என்றார். இருந்தாலுமே கங்கா கேட்கவில்லை, குமரனை தான் திட்டிக் கொண்டு இருந்தார்.

மகாநதி:

நேற்று எபிசோட்டில் சாரதாவிற்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால் காவேரி, தெரியாமல் நீவி விட்டுக் கொண்டிருந்தார். அதனால் சாரதா வலி தாங்க முடியாமல் கத்தினார். உடனே விஜய், சாரதாவிற்கு சுளுக்கு எடுத்துவிட்டு நன்றாக நடக்க வைத்தார். விஜய் செய்த செயலை பார்த்து சாரதா கண்கலங்கி விட்டார். அதற்குப்பின் நிவின்,விஜய், குமரன் மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜய் கொடைக்கானல் வீட்டு பத்திரத்தை எப்படியாவது மீட்டு அத்தை இடம் தர வேண்டும். அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம்
என்றெல்லாம் சொன்னார்.

நேற்று எபிசோட்:

இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விட்டார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் நிவின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=4781jlemj9w

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராகவை நிவின் தூக்கி விடுகிறார். பின் குமரன் நிவின் இருவருமே ராகவை அழைத்துக்கொண்டு விஜய் இருக்கும் இடத்திற்கு போகிறார்கள். அங்கு விஜய் பயங்கரமாக டான்ஸ் ஆடுகிறார். பின் பசுபதிக்கு போன் செய்த விஜய், ராகவை கடத்தி வைத்து இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் பசுபதி சாக் ஆகிறார். அதற்குப்பின் விஜய், கொடைக்கானலில் இருக்கும் சாரதா அத்தையினுடைய வீட்டை தர வேண்டும் இல்லை என்றால் உன் மகனின் கதை முடிந்துவிடும் என்று மிரட்டுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full