சிறையில் இருந்து வெளிவந்த ராகவ், விஜய்-காவிரி வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா அன்பரசு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. காவிரியால் விஜயின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது என்றார். தாத்தா, காவிரி இருந்தால் தான் விஜய் சந்தோஷமாக இருப்பான். அவன் விருப்பப்படி நடக்கட்டும். எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். அதற்குப்பின் சாரதா- காவிரி இருவரும் விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் விஜய் தன்னுடைய தாத்தா சித்தி, சித்தப்பாவை எல்லாம் காவிரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அம்மு தன்னுடைய வீட்டை சுற்றி காண்பிப்பதற்காக காவிரி அழைத்து சென்றார். பின் அம்மு தங்களுடைய ரூமை பற்றி சொல்கிறார். காவிரியும் சந்தோஷப்பட்டார். அங்கு ரூமில் காவிரியின் உடைய பழைய பொருட்களை எல்லாம் அம்மு காண்பித்தார். அதை பார்த்து காவிரிக்கு ஞாபகம் வருமா? என்று விஜய் பார்த்தார். ஆனால் காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. காவிரி, எதற்காக இந்த பொருளை வைத்திருக்கிறீர்கள் என்றார். விஜய், என் மனைவியின் ஞாபகம் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருந்தார்.
மகாநதி:
அதற்குப்பின் சாரதாவிடம் விஜயின் தாத்தா தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். சாரதாவும் பழைய விஷயத்தை மறந்துவிடலாம் என்று சொன்னார். பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சந்தோஷமாக சாப்பிட்டார்கள். விஜய், காவிரிக்கு பிடித்த பலகாரத்தை செய்து கொடுத்தார். இருந்தும் காவிரிக்கு பழைய ஞாபகங்கள் எதுவுமே வரவில்லை. சித்தப்பா, உண்மையை சொல்லாமல் காவிரியின் குடும்பத்தை முறைத்துக் கொண்டு இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காவேரி- சாரதா இருவருமே விஜயின் வீட்டில் உள்ள எல்லோரும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். அப்போது விஜய், நானே உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு பின் காரில் வரும்போது விஜய், காவிரியின் உடைய பழைய நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுப்படுத்தி பார்க்கிறார். ஆனால், காவிரிக்கு எந்த ஞாபகமே வரவில்லை. விஜய், எப்படியாவது உனக்கு பழைய ஞாபகத்தை கொண்டு வருவேன் என்று தன் மனதிற்குள் செல்கிறார்.
இது ஒரு பக்கம் விஜயின் சித்தப்பா அன்பரசனின் காரின் மீது ராகவின் கார் மோதும் படி வந்து நிற்கிறது.
சீரியல் ட்ராக்:
ராகவ், நான் ஐந்து வருஷத்துக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். விஜய், காவிரியை பழி வாங்காமல் விடமாட்டேன் என்றெல்லாம் சொல்கிறார். சித்தப்பா, காவிரிக்கு பழைய நினைவுகள் எதுவும் இல்லை என்று நடந்தது எல்லாம் சொல்கிறார். இருந்தாலும் ராகவ் அவர்கள் இருவரையும் பழிவாங்கியே தீருவேன் என்று இருக்கிறார். காவிரியின் பிறந்தநாளுக்காக கங்கா -யமுனா இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். தன் சகோதரிகளை பார்த்தவுடன் காவேரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் காவிரி பள்ளிக்கு கிளம்பி செல்கிறார். அங்கு விஜய் காத்துக் கொண்டிருக்கிறார்