ரவுடிகள் செய்த அட்டகாசத்தால் கங்காவிற்கு நேர்ந்த சோகம், பயந்து போன காவிரி - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- நிவின் இருவரும் சாக்கானார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து கிருஷ்ணா, ராகவுடன் பேசியது எல்லாம் விஜய்-நிவின் சொன்னார்கள். பின் முத்து மலர் குடும்பத்தை அழைத்து வந்து உண்மையை சொல்ல சொன்னார் விஜய். அப்போது முத்துமலர், நான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி என்று சொன்னதெல்லாம் பொய்தான். பசுபதி சொல்லி தான் நாங்கள் நடிக்க வந்தோம் என்றார். இதைக்கேட்டு சாரதா அதிர்ச்சி ஆனார்.
கோபத்தில் சாரதா, முத்து மலர் குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். முத்து மலர், நாங்கள் இதனை பணத்துக்காக செய்யவில்லை. பசுபதி சொன்னது போல் செய்யவில்லை என்றால் எங்களை கொன்னுடுவேன் என்று மிரட்டினார். அதற்காகத்தான் நாங்கள் இப்படி செய்தோம். உங்களுக்கு செய்தது பெரிய துரோகம் தான் மன்னித்து விடுங்கள் என்று கேட்டார். கோபத்தில் சாரதா அருவாளை எடுத்து முத்துமலரை வெட்டப் போனார். உடனே வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்து விட்டார்கள்.
மகாநதி:
அதற்கு பின் விஜய், உங்களுக்கான தண்டனை கொடுக்கப்படும் என்று போலீசில் கம்பளைண்ட் கொடுத்து விட்டார். பின் விஜய் வீட்டிற்கு வந்த போலீஸ், கிருஷ்ணா- முத்து மலர் குடும்பத்தை கைது செய்து செல்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். காவிரி தன் தந்தையை தவறாக புரிந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, தன் கணவரை தவறாக புரிந்து கொண்டோமே என்று நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார். கங்கா, யமுனா எல்லோருமே சாரதாவிற்கு ஆறுதல் சொல்கிறார்கள். இருந்தாலும் சாரதா மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி, சித்தி இருவரும் முத்துமலர் குடும்பம் செய்த பித்தலாட்ட வேலையை நினைத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சித்தப்பா, இது தான் சந்தர்ப்பம் என்று மீண்டும் பசுபதியால் விஜய்க்கு பிரச்சனை வரும் என்று ஏத்தி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் நிவின், யமுனா இருவரும் வீட்டிற்கு கிளம்புகிறார்கள். நிவின் கிளம்பிய உடன் பசுபதியின் ரவுடி ஆட்கள் விஜய் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை எல்லாம் அடித்து உடைக்கிறார்கள். கேள்வி கேட்ட தாத்தாவையும் அடிக்கிறார்கள். பின் கோபத்தில் கங்கா அவர்களை திட்டி வெளியே போக சொல்கிறார். அப்போது ஒரு ரவுடி, கங்காவை கீழே தள்ளி விடுவதால் அவருடைய வயிற்றில் அடிபட்டு வருகிறது. வலி தாங்க முடியாமல் கங்கா கத்துகிறார். சாரதா ரொம்பவே பதறிப் போகிறார்.