கிருஷ்ணாவை அசிங்கப்படுத்திய சாரதா, விஜய் எடுக்க போகும் முடிவு என்ன? பரபரப்பில் மகாநதி

By subhashini · 17/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா தவறி விழப்போவதால் முத்துமலர் பிடித்து விட்டு கவனமாக இரு என்று சொல்லிவிட்டு சென்றார். பின் சாரதா, பசியோடு வந்தாள். நான் திட்டி அனுப்பிவிட்டேன் என்று வருத்தப்பட்டார். சாரதா அவமானப்படுத்தியதை தன்னுடைய பிள்ளைகளிடம் சொல்லி முத்து மலர் ரொம்ப எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி,பாட்டி, சித்தி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை அசைவதால் எல்லோருமே காவிரியின் வயிற்றில் கை வைத்து சந்தோஷப்பட்டார்கள்.

காவிரியின் வயிற்றில் கை வைத்ததில் குழந்தை அசைவதால் தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். காவிரியை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் நர்மதா பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பால் தவறி மேலே விழுவதால் கிருஷ்ணா எடுத்து தர உதவி செய்தார். பின் நர்மதா, கிருஷ்ணா இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சாரதாவின் மாமியார், சந்தானத்திற்கு ஆண் வாரிசு இல்லை என்று கவலைப்பட்டேன். நீ இருக்கும் விஷயம் தெரிந்த உடன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. முன்னாடியே தெரிந்திருந்தால் எல்லோரும் சேர்ந்து இருக்கலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மகாநதி:

இதை கேட்ட நர்மதா, சாரதாவிடம் சொன்னார். இதனால் கொந்தளித்த சாரதா, தன்னுடைய மாமியாரை திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் கங்கா, குமரன் அனுப்பிய பழைய மெசேஜை எல்லாம் எடுத்து கேட்டுக் கொண்டிருந்தார். பின் குமரனுக்கு போன் செய்து பேச முயற்சித்தார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. பின் தன் அம்மாவிடம் குமரனை பற்றி கேட்டு விசாரித்தார். அதற்கு சாரதா, நான் பேசி ரொம்ப நாளாச்சு. நீ எதற்காக மாசக்கணக்கில் பேசாமல் இருந்தாய். ஒழுங்கு மரியாதையாக மாப்பிள்ளை இடம் பேசி என்று அறிவுரை எல்லாம் செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிருஷ்ணா, நர்மதா இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாடும் போது நர்மதா கீழே தடுமாறி விழும்போது கிருஷ்ணா பிடித்து விடுகிறார். ஆனால், இதை தவறாக புரிந்து கொண்ட விஜய், நர்மதாவை தொட்டுப் பேசாதே என்று திட்டி விடுகிறார். இது எல்லாம் கவனித்த சித்தப்பா, காவிரி அம்மாவிடம் ஒன்றுக்கு இரண்டாக கிருஷ்ணாவை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார். இதனால் கொந்தளித்த சாரதா, என் மகளிடம் தவறாக நடந்து கொள்வாயா? என்று உண்மை தெரியாமல் கிருஷ்ணாவை அடி வெளுத்து வாங்குகிறார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் பெரிய கலவரம் வெடிக்கிறது. பின் ஆபீஸிலிருந்து விஜய் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விசாரிக்கிறார். சாரதா- முத்து மலர் இரண்டு குடும்பமே மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதை பார்த்து விஜயின் தாத்தா, பாட்டி இருவரும் கோபப்படுகிறார்கள். கடைசியில் விஜய், நீங்கள் இந்த வீட்டில் யாரும் பிரச்சினை செய்ய வேண்டாம். யாராக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே இருக்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று விடுங்கள் என்று சொல்கிறார். இதை கேட்டு காவிரி சாக்குகிறார். சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full