தன் மனதில் மறைத்து வைத்த காதலை போட்டுடைத்த காவிரி, சாரதா எடுத்த முடிவு - விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 25/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், விஜய், மன அழுத்தமாக இருக்கிறது. நான் தனியாக இருந்து விட்டு வருகிறேன் என்று சென்றார். இதையெல்லாம் கேட்டு அவருடைய பாட்டி ரொம்பவே கஷ்டப்பட்டார். அதற்குப்பின் விஜய்யின் பாட்டி வக்கீலை வரவைத்து விவாகரத்து நோட்டீசை ஏற்பாடு செய்தார். தாத்தா வேணாம் என்று தடுத்துமே பாட்டி கேட்கவில்லை. பின் விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக்கொண்டு காவிரியின் வீட்டிற்கு போன பாட்டி, விஜய்யும் நீயும் தனியாகத்தான் இருக்கிறீர்கள். சட்டப்படி நீங்கள் இருவருமே பிரிந்து விடுங்கள். அவரவர் வாழ்க்கையை பாருங்கள் என்றார். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் காவிரி உறைந்து போனார்.

விஜய்யின் பாட்டி, உன்னிடம் விவாகரத்து கேட்டதே விஜய் தான். அவன் தான் எங்களை அனுப்பி வைத்தான். உன்னிடம் பேசக்கூட அவனுக்கு விருப்பம் இல்லையாம். நீ எதுவும் பேசாமல் விவாகரத்திற்கு கையெழுத்து போடு. உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொன்னார். அதற்கு காவிரி, நான் விஜய்யிடம் பேசிவிட்டு முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். அதற்கு விஜயின் பாட்டி, விஜய் சொன்னதாக கட்டுக்கதைகளை சொன்னார். நாளை வருவதற்குள் நல்ல முடிவு எடு என்று பாட்டி சொன்னார். அதற்குப்பின் காவிரி அம்மா, ஓழுங்கு மரியாதையாக அந்த பையனை விவாகரத்து செய் என்று வழக்கம் போல திட்டிக் கொண்டிருந்தார்.

மகாநதி:

அதற்குப்பின் நிவின், குமரனை வைத்து காவிரி- விஜய் விவாகரத்தை பற்றி அவருடைய அம்மா பேசி இருந்தார். காவிரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் காவிரியை அழைத்துக் கொண்டு நிவின், குமரன் இருவரும் தனியாக பேசி இருந்தார்கள். அப்போது காவிரி, உங்களுக்கு விஜய் சித்தி சொன்ன விஷயம் தான் தெரியும். அதற்கு முன் நான் விஜயுடன் கிளம்ப தயாராக இருக்கும்போது விஜயின் பாட்டி என்னை கோயிலுக்கு அழைத்து, நீ வீட்டிற்கு வரக்கூடாது. விஜயின் வாழ்க்கை விட்டு போ என்றெல்லாம் சொன்னார் என்றார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் விஜயின் பாட்டி சொன்னதை கேட்டு நிவின், குமரன் இருவருமே ஷாக் ஆனார்கள். பின் நிவின், விஜய் விவாகரத்து விஷயத்தை பற்றி பேசி இருக்க மாட்டார். இது பாட்டியோட வேலையாக தான் இருக்கும் என்று சொன்னார். உடனே விஜய்க்கு போன் செய்த நிவின், காவேரி பற்றி பேசியவுடன் விஜய் கோபப்பட்டு போனை கட் செய்தார். மறுநாள் காலையில் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்குவதற்காக பாட்டி, சித்தி இருவருமே வந்திருந்தார்கள். அப்போது காவிரி, எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் பேசிவிட்டு தான் முடிவெடுப்பேன் என்றார்.

சீரியல் ட்ராக்:

கடைசியில் கோவப்பட்ட காவிரி, விஜய் இடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள். நான் போடுகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு விடாமல் போன் செய்தார். ஒரு கட்டத்தில் விஜய் திரும்ப போன் செய்தார். ஆனால், காவிரியின் அம்மா போனை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுத்தார். அப்போது காவேரி அம்மா, உனக்கும் விஜய்க்கும் என்ன உறவு? ஏன் அவனை விவாகரத்து செய்ய மாட்டுகிறாய் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு கோபத்தில் காவிரி, நான் மனைவியாக நடிக்கப் போனாலும் மனதார அவருடன் வாழ்ந்தேன். நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் காவேரி குடும்பத்தில் எல்லோருமே ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து அவருடைய அம்மா ஷாக் ஆகி கீழே உட்காருகிறார். அப்போது காவிரி, இந்த விஷயம் எனக்கே லேட்டாக தான் தெரியும். விஜய் எனக்காக தான் இங்கு வந்தார். பின் விஜய்க்கு குழந்தை விஷயம் தெரிந்தது, தாங்கள் வாழ்ந்தது, விஜய் தன்னை பார்த்துக் கொண்டது பற்றியெல்லாம் தன் அம்மாவிடம் காவிரி சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே விஜய்- காவிரியை சேர்த்து வைப்பது பற்றி பேசுகிறார்கள். உடனே குமரனிடம் காவிரி அம்மா, விஜய்யை அழைத்து வர சொல்கிறார். அதற்குப்பின் காவேரி, விஜய்க்கு போன் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் வாய்ஸ் மெசேஜில் நடந்ததை எல்லாம் காவிரி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full