அவமானப்படுத்தும் சாரதா, எமோஷனலாக முத்துமலர் சொன்ன விஷயம் - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த கிருஷ்ணா, சொத்தில் சரி பாதி கொடுக்க வேண்டும். ஒரு பங்கு எல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். உடனே விஜய், அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்புங்கள். நீங்கள் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு கிருஷ்ணா, நான் எதற்காக போனோம். என்னால் போக முடியாது என்றார். இதனால் கோபப்பட்ட காவிரி, கிருஷ்ணாவிடம் சண்டைக்கு போனார்.
பின் விஜயின் தாத்தா, பாட்டி இருவருமே முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார். இதனால் விஜய் வீட்டில் உள்ள எல்லோரையும் வரவைத்து சொத்தில் ஒரு பங்கு தருகிறோம். இல்லை என்றால் கோர்ட்டில் கேசை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்கு முத்து மலர், நாங்கள் எங்கே போக முடியும்? எங்களுக்கான பங்கை கொடுத்து விடுங்கள். நாங்கள் கிளம்பி விடுகிறோம் என்றார்.
மகாநதி:
விஜய், முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொன்னார். ஆனால், அவர்கள் போக முடியாது என்று வீட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இதனால் கொந்தளித்த விஜயின் சித்தப்பா, முத்துமலரை பிடித்து தள்ளுகிறார். இதனால் வீட்டில் பெரிய கலவரமே வந்தது. பின் விஜய் போலீசுக்கு போன் செய்து வரவைத்தார். விஜயின் வீட்டிற்கு வந்த போலீஸ், முத்துமலர் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். அதற்கு கிருஷ்ணா, நாங்கள் சொத்தில் சரி பாதி தான் கேட்கிறோம். நாங்கள் எந்த பிரச்சினையும் செய்யவில்லை என்றார். அதற்கு போலீஸ், இவர்தான் சந்தானத்தின் மனைவி என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றார்.
சீரியல் ட்ராக்:
உடனே கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவின் திருமண பதிவை காண்பித்தார். இதை பார்த்து சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. அதற்குப்பின் போலீஸ் சாரதாவிடம் திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறீர்களா? என்றார். அதற்கு சாரதா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றார். அப்போ சட்டப்படி முத்துமலர் தான் சந்தானத்தின் மனைவி என்று போலீஸ் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் சாரதாவின் குடும்பத்திற்கு தலை மேல் இடி விழுகிறது. கிருஷ்ணா தன்னுடைய அம்மா, தங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். விஜய் கோபத்தில் இருந்தார்.
https://www.youtube.com/watch?v=QaddLqX_13g
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து மலர், காபி போட்டுமா என்று கேட்கிறார். சாரதா, இப்படி திருட்டுத்தனமாக போட்டு குடிப்பதற்கு பிச்சை எடுக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு முத்துமலர், நான் மட்டும் இருந்தால் பிச்சை எடுத்து இருப்பேன். என்னை நம்பி இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. என்ன செய்வது? என்று எமோஷனலாக பேசிவிட்டு வெளியே வருகிறார். அப்போது கங்கா, தடுமாறி கீழே விழப் போகிறார். கங்காவை பிடித்த முத்து மலர், ஆறாவது மாதம் கவனமாக இரு என்று அறிவுரை சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இதை பார்த்து சாரதாவிற்கு கஷ்டமாக இருக்கிறது.