வீட்டை விற்க சாரதா எடுத்த முடிவு, கோபத்தில் கொந்தளித்த கங்கா-யமுனா, அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா, காவிரி பெயரில் கொடுக்க முடியாது என்றார். அதற்குப்பின் சாரதா, காவிரி பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்கக் கூடாது என்கிறாயா? என்றார். அதற்கு கங்கா, அவர் பெயரில் கொடுத்தால் நமக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும் என்றார். பின் சாரதா, யாரோ எடுத்துச் செல்வதற்கு காவிரி பெயரில் இருந்தால் நம்முடைய வீடு நம்மிடமே இருக்கும். எதற்கு அவள் மீது இவ்வளவு பொறாமைப்படுகிறீர்கள் என்றெல்லாம் திட்டினார். இருந்தாலுமே கங்கா- யமுனா கேட்கவில்லை. இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள்.
காவிரிக்கு போன் செய்து கங்கா- யமுனா இருவரும் பேசி இருந்தார்கள். அப்போது கங்கா, நீ கொடைக்கானல் வீட்டை வாங்க போறியா? என்றார். அதற்கு காவிரி, எல்லோரும் முன்பு தானே சொன்னேன். வேறு ஒருவர் வாங்குவதற்கு நான் வாங்கினால் அது நம்முடையதாகவே இருக்கும். எனக்கு அந்த வீடு யார் கைக்கு போகக்கூடாது. அது அப்பாவுடைய வீடு என்று ரொம்ப சென்டிமெண்டாக பேசி இருந்தார். இதை கேட்டு கடுப்பான கங்கா, நாங்கள் வீட்டை விற்கத் தான் போகிறோம். ஆனால், உனக்கு கொடுக்க முடியாது. வீட்டை வாங்கும் எண்ணத்தை விட்டு விடு என்றெல்லாம் இருவரும் சேர்ந்து மிரட்டினார்கள்.
மகாநதி:
உடனே காவிரி, வீட்டை விற்றால் நான் தான் வாங்குவேன் என்று சவால் விட்டு போனை வைத்து விட்டார். அதற்குப்பின் கங்கா- யமுனா பேசியதை பற்றி விஜய்யிடம் சொல்லி காவிரி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய், இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நீ கொஞ்சம் வசதியாக இருக்கிறாய். அந்த பொறாமையில் கூட அவர்கள் இப்படி சொல்லலாம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் சொன்னார். மறுநாள் காலையில் சாரதா, தன் மகள்களை வீட்டிற்கு வரவைத்தார். அப்போது கொடைக்கானல் வீட்டை விற்பதை பற்றி சாரதா பேசுகிறார். கங்கா, காவிரிக்கு கொடுக்கக் கூடாது. எனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடலாம் என்றார். அதற்கு காவேரி, அந்த வீட்டை நான் தான் வாங்குவேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாரதா, இந்த வீட்டை நான் காவிரிக்கு தான் விற்கப் போகிறேன். எனக்கும் காவிரிக்கும் வீட்டை விற்கணும் என்று அவசியம் இல்லை. ஆனால், உங்களுக்கு பணத்தேவை என்பதால் தான் வீட்டை விற்க ஒத்துக் கொண்டேன். இந்த வீடு வேற யார் கையில் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. காவேரிக்கு தான் கொடுக்கப் போகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு கங்கா- யமுனா இருவருமே கோபத்தில் குதிக்கிறார்கள். காவிரியின் பெயரில் எழுதிக் கொடுக்க முடியாது என்று வழக்கம்போல தங்களுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்கள் கங்கா-யமுனா. இதனால் பாட்டி, நர்மதா சாரதா மூவருமே அவர்களிடம் பேசி பார்க்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
கடைசியில் சாரதா, இதுதான் என்னுடைய முடிவு. விருப்பம் இருந்தால் வீட்டை விற்கலாம் இல்லை என்றால் முடியாது என்கிறார். இதனால் கங்கா, யமுனாவில் எதுவுமே பேச முடியவில்லை. கடைசியில் காவிரிக்கு விற்க ஒத்துக் கொள்கிறார்கள். அதற்குப்பின் எல்லோருமே கொடைக்கானல் வீட்டிற்கு கிளம்புகிறார்கள். கங்கா தன்னுடன் குமரன் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் ஒரு வழியாக எல்லோருமே கொடைக்கானல் சென்று விடுகிறார்கள். அங்கு சந்தானத்தை பற்றி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது