முத்துமலர் குடும்பத்தை பார்த்து பயந்தோடும் சாரதா, விஜய் எடுக்க போகும் முடிவு என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வேண்டுமென்று யமுனா, தண்ணியை தட்டி விடுகிறார். இதனால் கோபத்தில் முத்தமிழரின் மகன் சண்டை போடுகிறார். நிவினுக்கு உண்மை தெரியவில்லை. இருந்தாலும் யமுனாவிற்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக முத்துமலர் குடும்பத்தை வெளியே போக சொல்கிறார்கள். ஆனால் ,அவர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். உடனே முத்து மலரின் மகன், நீங்கள் இந்த வீட்டை விற்கை ஏற்பாடு செய்யும் விஷயம் எனக்கு தெரியும். நீங்கள் இந்த வீட்டை விற்க முடியாது என்று கோர்ட் நோட்டீசை காண்பிக்கிறார்.
இதை பார்த்து காவிரி குடும்பத்தில் எல்லோருமே சாக் ஆனார்கள். கோபத்தில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
மகாநதி:
காவேரி, வீட்டில் உண்மை தெரிந்து என்ன சொல்வார்களோ? என்று புலம்பி கொண்டிருந்தார். விஜய், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் தைரியமாக இது என்றார். பின் காவிரி- விஜய் இருவரும் வீட்டிற்குள் வந்தவுடன் பாட்டி, தாத்தா, சித்தப்பா எல்லோருமே விசாரித்தார்கள். விஜய் ஏதேதோ சொல்லி சமாளித்தார். சித்தப்பா, இல்லையே காவேரி அப்பாவிற்கு இரண்டு பொண்டாட்டி. அவர்களால்தான் சொத்தை மாற்ற முடியவில்லை. பங்கு கேட்டு பிரச்சினை செய்கிறார்களே என்று நடந்ததை எல்லாம் நேரில் பார்த்தது போலவே சென்றார்.
சீரியல் ட்ராக்:
பின் பாட்டி, காவிரியின் குடும்பத்தையும் காவிரியையும் பற்றியும் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட விஜய், எல்லோரிடமும் சண்டை போட்டு இனிமேல் காவிரியை பற்றி யாரும் பேசக்கூடாது என்று ரூமிற்கு சென்று விட்டார். இருந்தாலுமே காவேரி, பாட்டி சொன்னதையும், தன் அப்பா செய்த துரோகத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் சாரதா, சந்தானம் தனக்கு செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக உடைந்து போய் அழுதார். கங்கா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் சாராதவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
https://www.youtube.com/watch?si=xg58fhv9shZ1VgEz&v=91vAE1l0mKU&feature=youtu.be
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்துமலர் குடும்பம் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். இதனால் முத்துமலர் குடும்பம், எங்குமே போக முடியாது. இங்கேதான் இருப்பேன் என்று பிரச்சினை செய்கிறார்கள். உடனே இதை அறிந்த விஜய், சாரதாவின் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாரதா குடும்பத்தை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். அதற்குள் முத்துமலர் குடும்பம் விஜயின் வீட்டிற்கு வந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.