சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்யும் முத்துமலர், சாரதா எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்துமலர், நான்தான் சந்தானத்தின் இரண்டாவது மனைவி. அவர் கத்தாரில் வேலை செய்யும் போது தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. எனக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். உங்களைப் பற்றி எல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார். ஆனால், எங்களை பற்றி உங்களிடம் சொல்லவில்லை. அதற்குள் அவர் தவறிவிட்டார் என்றார். இதை கேட்டு சாரதா குடும்பத்திற்கு இடிமேல் இடி விழுகிறது. சாரதா கோபப்பட்டு சண்டை போட்டார். காவிரி, போலீசை அழைப்பேன் என்றெல்லாம் மிரட்டினார். பின் அந்த நபரின் மகன், சந்தானம் தான் எங்கள் அப்பா என்பதற்கான ஆதாரம் காண்பிக்க, சாரதா குடும்பத்தில் எல்லோருமே உறைந்து போனார்கள்.
காவேரி அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை . யமுனா, இதெல்லாம் போட்டோ எடிட்டிங் ஆக இருக்கும். நீங்கள் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள் என்றார். இரண்டாவது மனைவி முத்து மலரின் மகன்,
இந்த சொத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. என்னை மீறி வீட்டை விற்க முடியாது என்று சொல்கிறார். அப்போது விஜய், அதெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது என்று போலீசுக்கு போன் செய்தார். இதையெல்லாம் பார்த்து சாரதாவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழுந்தா. பின் அந்த இடத்திற்கு போலீஸ் வந்து விசாரித்தார்கள். அப்போது முத்து மலர், எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆகிறது.
மகாநதி:
நாங்கள் கத்தாரில் தான் இருந்தோம் என்றெல்லாம் சொன்னார். இதெல்லாம் பொய் என்று சாரதா- காவிரி சொன்னார்கள். இருந்தாலுமே விடாமல் முத்து மலர், அவரை நம்பி தான் இத்தனை நாட்களாக இருந்தோம். இப்போது எங்களுக்கு என்று யாரும் இல்லை. சொத்தை விற்பதாக தெரிந்தது. அதனால்தான் நாங்கள் பங்கு கேட்டு வந்தோம் என்று சொல்லி தங்களிடம் இருக்கும் ஆதாரத்தை எல்லாம் காண்பித்தார்கள். போலீசுமே அதை பார்த்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ், பத்திரம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இது உங்களுடைய குடும்ப பிரச்சினை. நீங்கள் தான் பேசிக்கொள்ளனும் என்று சொல்கிறார். சாரதா, ஒரு தூசி கூட என்னால் தர முடியாது. ஒழுங்கு மரியாதையாக கிளம்ப சொல்லுங்கள் என்கிறார். அதற்கு முத்துமலர், எங்களுடைய சொத்து பங்கு வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றார்கள். உடனே போலீஸ், நீங்கள் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அதற்கு முத்து மலர், கோர்ட்டில் தீர்ப்பு வர தாமதமாகும். இங்கேயே பேசி முடிவெடுங்கள் என்கிறார். சாரதா ஒத்துக்கொள்ளவில்லை. பங்கை வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என்று முத்துமலர் குடும்பம் அங்கேயே உட்காருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டுக்குள் சாரதா ரொம்பவே உடைந்து போய் பேசிக் கொண்டிருக்கிறார். தன் கணவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று புலம்பி கொண்டிருக்கிறார். சாரதா, கங்கா இருவருமே சொத்தை காவிரி பெயரில் மாற்றிவிடலாம். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஐடியா கொடுக்கிறார்கள். அதற்கு விஜய், பிரச்சனை வருமே, என்ன செய்வது என்று சொல்கிறார். அதற்கு சாரதா, காவிரி பெயரில் இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதற்கான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்கிறார். விஜய், நாளை தான் ரிஜிஸ்டர் பண்ண முடியும். இன்னிக்கு முடியாது அமைதியாக இருங்கள் என்று சமாதானம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.