விஜய்யின் காலில் விழுந்து நன்றி சொன்ன சாரதா , ஆத்திரத்தில் பொங்கும் கங்கா- மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கங்கா போன் செய்ய, குமரனும் நடந்த விஷயத்தை சொன்னார். பின் கங்கா திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்ப சொன்னார். ஆனால், குமரன் கேட்காமல் போனை வைத்து விட்டார். இதனால் கங்கா, விஜய் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அதற்குப்பின் பசுபதி சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த விஜய், சாரதா அத்தை வீட்டிற்கு கிளம்பு. பத்திரத்தை எடுத்து வந்தாயா? என்றெல்லாம் கேட்க, பசுபதியும் ஆமாம் என்றார்.
சாரதா வீட்டிற்கு வந்த பசுபதியிடம் போனில் விஜய், நான் சொல்வதைப்போலவே செய் என்றார். பசுபதியை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பசுபதி, நான் செய்ததெல்லாம் தவறு. போலியான டாக்குமெண்ட் இதுதான் என்று விஜய் சொன்னது போல கிழித்து போட்டார். பின் ஒரிஜினல் பாத்திரத்தை சாரதாவிடம் கொடுத்தார். பின் காவிரிக்கு போன் செய்த விஜய், பத்திரத்தை செக் பண்ண சொன்னார். உங்களுக்கு பண்ண டார்ச்சலுக்கு திருப்பி ஒரு அறை கொடு என்றார். காவிரியும் கோபத்தில் பசுபதியை அறைந்து விட்டு வெளியே போக சொன்னார்.
மகாநதி:
நேற்று எபிசோட்டில் சாரதா, எப்படி பசுபதியே பத்திரத்தை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்தான் என்று கேட்டார். அதற்கு காவேரி, ராகவை கடத்தின விஷயத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு சாரதா ஷாக் ஆனார். இருந்தாலுமே காவேரி எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். பின் பத்திரம் கிடைத்த சந்தோஷத்தில் தன்னுடைய கணவனின் போட்டோ முன்பு எமோஷனலாக சாரதா அழுது பேசி இருந்தார். இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனை தேடி போனார். ஆனால், விஜய் இங்கு அங்கு என்று அவரை அலைய வைத்தார். ஒரு கட்டத்தில் ராகவை, பசுபதியிடம் ஒப்படைத்தார் விஜய்.
கடந்த வாரம் எபிசோட்:
கோபத்தில் பசுபதி சவால் எல்லாம் விட்டார். அதற்கு விஜய்- நிவின்-குமரன் மூவருமே பதில் கொடுத்தார்கள். பின் பசுபதி, ராகவை அழைத்து கொண்டு சென்றார். இன்னொரு பக்கம் கங்கா, குமரன் எங்கே? விஜயால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். அதற்கு காவிரி, பசுபதியால் தான் விஜய்க்கு பிரச்சனை. நம்மால் தான் விஜய் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொண்டார். தேவையில்லாமல் அவரைப் பற்றி பேசாதே என்று திட்டினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய்- குமரன் இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். குமரனை பார்த்து கங்கா முறைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சாரதா, பத்திரத்தை விஜயின் கையில் கொடுத்து காலில் விழுந்து எமோஷனலாக நன்றி சொல்லி அழுகிறார். இதை பார்த்து விஜய்க்கு சங்கடமாக இருக்கிறது. அதற்குப்பின் விஜய், உங்களுக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் வரவிடமாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயை ஹீரோ போல பேசுகிறார்கள். இது எல்லாம் பார்த்து கங்காவிற்கு கோபம் தான் வருகிறது. பத்திரத்தை மீட்க குமரனும் உதவி செய்தார் என்று தெரிந்துமே அவரை யாரும் புகழவில்லை என்று கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் நிவின் செய்த வேலையை தெரிந்த அவருடைய அம்மா திட்டி கொண்டிருக்கிறார். ஆனால், நிவின் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.