மயங்கி கீழே விழுந்த கங்காவிற்கு உதவி செய்யும் சிந்து, ஷாப்பிங் போன விஜய், காவிரி- மகாநதி

By subhashini · 5/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் டாக்டர், அவர்கள் கூட இருந்து ஒரு நர்ஸ் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்னார். உடனே விஜய், நர்சை ஏற்பாடு செய்கிறேன் என்றார். அதற்குப்பின் விஜய்-காவிரி இருவரும் சிந்துவை நர்சாக வைப்பதற்கு முடிவு செய்தார்கள். பின் முத்துமலர், சிந்துவை வரவைத்த விஜய், நீ நர்சாக இருந்து பாட்டியை பார்த்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்பிடலில் எவ்வளவு வாங்கினாயோ அதையே தருகிறேன் என்றார். இதை கேட்டவுடன் எமோஷனலான சிந்து, விஜய் காலில் விழுந்து நன்றி சொன்னார்.

கிருஷ்ணா, விஜயின் ஆஃபீஸில் வேலைக்கு சேர்ந்தார். விஜய் தன்னுடைய ஆபீஸில் எல்லோரிடமும் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைத்து வேலை நடக்கும் இடத்திற்கு போக சொன்னார். இது எல்லாம் பார்த்த சித்தப்பா கடுப்பாகி கிருஷ்ணாவை பற்றி தப்பு தப்பாக விஜயிடம் சொன்னார். ஆனால், விஜய் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின் கிருஷ்ணா, வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சித்தப்பா அவரை அவமரியாதையாக பேசுவதோடு திட்டிக் கொண்டே இருந்தார். கிருஷ்ணாவை வேலையும் செய்ய விடாமல் தடுத்தார். ஆனால், கிருஷ்ணா அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தார்.

மகாநதி:

இன்னொரு பக்கம் சிந்து, விஜயின் பாட்டியை நன்றாக பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். இது எல்லாம் பார்த்து தாத்தா ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சாரதா காவிரிக்கு வளைகாப்பு நடத்த இருப்பதால் அதற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய நினைத்தார். உடனே முத்து மலர், எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் சித்தப்பா, கிருஷ்ணா வேலையே செய்யவில்லை. நடித்துக் கொண்டிருந்தார். அவன் உன்னை ஏமாற்ற போகிறான் என்றெல்லாம் தவறாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கிருஷ்ணா, அவர் பார்த்த வேலை எல்லாம் விஜய் இடம் சொல்லிவிட்டு சென்றார். பின் விஜய், கிருஷ்ணாவை வேலை செய்யவிடாமல் சித்தப்பா தடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் காண்பிப்பதால் சித்தப்பா எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சித்தப்பா கையும் களவுமாக மாட்டியதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். விஜய், இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் கிளம்பி வீட்டிற்கு வருகிறார்கள். இன்னொரு பக்கம் பாட்டிக்கு மருந்து மாத்திரை எல்லாம் சிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கங்கா மயங்கி கீழே விழப்போகிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே சிந்து அவரை பிடித்து உட்கார வைத்து செக் செய்கிறார். அப்போது கங்கா சரியாக சாப்பிடாமல் இருந்ததால் பிபி லோவாகி இருப்பது தெரிய வருகிறது. அதற்குப்பின் சிந்து, கங்காவிற்கு முதலுதவி செய்து சாப்பாடு கொண்டு வந்து தருகிறார். கங்கா வேண்டாம் என்று சொல்லியும் தாத்தா சாப்பிட சொல்கிறார். அதற்கு பின் கங்கா உடல்நிலை சரியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் விஜய்- காவிரி இருவரும் வளைகாப்பு நடக்க இருப்பதால் இருவருக்கும் துணி எடுக்க கடைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு துணியையும் காவிரி செலக்ட் செய்து இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full