மயங்கி விழுந்த பாட்டிக்கு உதவி செய்யும் சிந்து, விஜய் சொன்ன வார்த்தை - பரபரப்பில் மகாநதி

By subhashini · 28/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. தயவுசெய்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அவர்கள் எல்லோரையும் சமாதானம் செய்து உட்கார வைத்தார். பின் விஜய், தன்னுடைய தரப்பு நயத்தை எல்லாம் எடுத்து சொல்லி வீட்டு வேலையை முடித்து தருவதற்கு சில மாதங்கள் நேரம் கேட்டார். ஆனால், கஸ்டமர் எல்லோருமே முடியாது என்று மறுத்தார்கள். பின் விஜய், எப்படியோ பேசி நேரம் வாங்கிக் கொண்டார். அப்போது கஸ்டமர் ஒருவர், நீங்கள் சரியான நேரத்தில் முடித்து தரவில்லை என்றால் நாங்கள் போலீஸில் புகார் கொடுப்போம் என்றெல்லாம் செல்வதால் விஜயும் ஒத்துக் கொண்டார்.

இன்னொரு பக்கம் விஜயின் பாட்டி பேசியது நினைத்து சாரதா, கங்கா இருவருமே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது முத்து மலர் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். இருந்தாலுமே சாரதா கேட்கவில்லை. இன்னொரு பக்கம் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று விஜய்- காவிரி இருவருமே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது விஜய்க்கு போன் செய்த நிவின், குமரன் இருக்கும் இடம் தெரியவில்லை. சீக்கிரமாகவே கண்டுபிடிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றார்.

மகாநதி:

கங்கா, சாரதா இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருப்பதை கவனித்த விஜயன் தாத்தா, அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் வேலையெல்லாம் முடித்துவிட்டு விஜய்-காவிரி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சோர்வாக இருப்பதால் காவிரி, டீ கேட்டார். பின் விஜய்யும் காவிரி சாப்பிடுவதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து ஆபீஸில் நடந்ததை பற்றி எல்லாம் பேசிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். அடுத்த நாள் காலையில் தாத்தா, பாட்டி இருவரும் விஜய்யை பேசுவதற்கு கூப்பிட்டார்.

சீரியல் ட்ராக்:

விஜய், என்னவோ நடக்கப்போகிறது என்று பயந்து கொண்டிருந்தார். உடனே பாட்டி, காவிரியின் வளைகாப்பு பற்றி பேசணும். வீட்டில் உள்ள எல்லோருமே வரட்டும் என்றார். பின் காவிரி, சாரதா, கங்கா எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது தாத்தா, காவேரிக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு நடத்த இருக்கிறோம். வளைகாப்பு முடிந்தும் காவிரி இங்கே இருக்கட்டும் என்றார். சாரதா, வளைகாப்பு முடிந்து என்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றார். அதற்கு பாட்டி ஒத்துக் கொள்ளவே இல்லை. தாத்தா, உங்கள் பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு காவிரி உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்றார். இதனால் சாரதாவால் எதுவும் பேச முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=6TjgN8XTRKQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜயின் பாட்டி மயங்கி கீழே விழுகிறார்.
வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். சிந்து, விஜயின் பாட்டியைக் செய்து சுகர் கம்மியாக இருக்கிறது என்று அதற்கான முதலுதவியை செய்கிறார். அதற்குப்பின் பாட்டி கண் விழிக்கிறார். இதைப் பற்றி தாத்தா விஜய்யிடம் சொல்கிறார். பின் விஜய், சிந்துவை சந்தித்து தன் பாட்டியை காப்பாற்றியதற்கு நன்றி
சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full