காவிரி பற்றிய உண்மையை சொன்ன சோமு, ஷாக்கில் உறைந்த விஜய், இனி நடக்கப்போவது என்ன? மகாநதி

By subhashini · 27/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், ஸ்கூலுக்கு ஓடி போனார். ஆனால், டீச்சர் யாரும் அங்கு இல்லை. இன்னொரு பக்கம் யமுனாவிற்கு அடிபட்டு இருப்பதால் சாரதா- காவிரி இருவரும் விசாரித்தார்கள். பின் யமுனாவை பார்க்க இருவருமே கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் விஜய், அம்முவிடம் அவருடைய கிளாஸ் டீச்சர் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். பின் விஜய், காவிரியின் புகைப்படத்தை காண்பித்தார். அம்மு, இவர்தான் என்னுடைய டீச்சர் என்றார். ஷாக் ஆன விஜய் குழப்பத்திலேயே இருந்தார்.

விஜய், அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்தால் எல்லா சந்தேகமும் தீர்ந்துவிடும் என்று நினைத்தார். பின் மறுநாள் காலையில் அம்முவை விஜய் ஸ்கூலுக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கு காவேரிக்கு பதில் வேறொரு டீச்சர் இருந்தார். அதை பார்த்த அம்மு, இவர் என்னுடைய கிளாஸ் மிஸ் இல்லை என்று சொல்லி உள்ளே சென்றார். விஜய், பிரின்சிபிலை சந்தித்து காவிரியின் வீட்டு அட்ரஸை கேட்டார். ஆரம்பத்தில் அவர் தர மறுத்தாலும் பின் விஜய் கெஞ்சி கேட்டதால் தந்து விட்டார்கள். பின் அந்த அட்ரசுக்கு விஜய் போனார்.

மகாநதி:

அங்கு வீடு பூட்டு போட்டு இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விஜய் விசாரிக்க, இருவரும் வெளியே போய் இருப்பதாக சொன்னார்கள். பின் விஜய், காவேரியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டார். அதற்கு அவர்களும் ஆமாம் என்றார்கள். இதனால் விஜய் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் யமுனாவை பார்க்க சாரதா, காவிரி இருவரும் பார்க்கப் போனார்கள். பின் யமுனாவை பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் அங்கேயே தங்குகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி தாத்தாவிடம் கேட்டார். அவர் ஷாக் ஆகி நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜய், உண்மையாலுமே காவிரிக்கு என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள் தாத்தா என்கிறார். சித்தி, சித்தப்பா, தாத்தா எல்லோருமே காவிரி இறந்து விட்டதாக சொல்கிறார்கள். இருந்தாலும் விஜய் நம்பவில்லை. பின் விஜய், தன் மொபைலில் இருக்கும் காவிரி வீடியோவை ஆதாரமாக காண்கிறார். அதை பார்த்து தாத்தா சோமு ஷாக் ஆகிறார். சித்தப்பா, காவிரி இறந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சோமு, காவிரி இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்கிறார். இதனால் விஜய் உறைந்து போய் நிற்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் தாத்தா சோமு, காவிரி மறந்து போன விஷயத்தையும் பாட்டி சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் விஜய் நொறுங்கிப் போகிறார். பின் கோபத்தில் விஜய், எதற்காக இப்படி
செய்தீர்கள்? நீங்கள் சொன்னதை நம்பி நானும் என் பொண்ணும் காவிரியை பிரிந்து இருக்கிறோம் என்று எமோஷன் ஆக பேசி அழுகிறார். அப்போது அன்பரசு, காவிரிக்கு உன் ஞாபகமும் குழந்தை ஞாபகம் இல்லை
இல்லை என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full