காவேரி குடும்பத்தை அசிங்கப்படுத்திய வெண்ணிலா, விஜய் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 13/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலில் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். பின் அவர் பார்த்து பார்த்து தன்னுடைய மனைவியை கவனித்துக் இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமானது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மனதை மாற்றி காவிரி, விஜயை பிரிக்க ஒரு கும்பலை சதி தீட்டுகிறது. பின் ஓரு நாள் முழுவதும் காவிரி-விஜய் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். காவிரிக்கு வீட்டிற்கு செல்ல மனமே இல்லை. இருந்துமே வேறு வழி இல்லாமல் தன்னுடைய மனைவியை அனுப்பி வைத்தார் விஜய். பின் விஜய், நிவீனை சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது விஜய், காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி நன்றி சொன்னார். உடனே நிவின், காவிரி தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்றார். நீங்கள் இப்படி இருப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். பின் விஜய், நிவினை கட்டி பிடித்து இருவருமே தங்களுடைய பழைய பிரச்சினைகளை மறந்து விட்டார்கள். பின் வீட்டில் விஜய், காவிரியுடன் இருந்த நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். பின் அவர் காவிரியை வர சொன்னார். காவிரியும் விஜய் பார்க்க வந்தார். அப்போது இருவருமே ரொம்ப எமோஷனாக தங்களுடைய குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

மகாநதி சீரியல்:

நேற்று எபிசோட்டில் காவிரியின் அம்மா மற்றும் அத்தை இருவருமே, நீ விஜயை விவாகரத்து செய்துவிட்டு. உனக்கான வாழ்க்கையை பார் என்று சொன்னார்கள். அதற்கு காவிரி, நான் எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசுகிறேன் என்று அங்கிருந்து சண்டை போட்டு கிளம்பி வந்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டின் ஓனர் மாமி, என்னதான் நடக்குது? மீடியாக்கள் வீட்டின் முன்பு தொந்தரவு செய்தார்கள். இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றெல்லாம் பேசி இருந்தார். உடனே விஜய், நானும் காவிரியும் சேர்ந்து வாழ்வதுதான் உண்மை. கூடிய விரைவில் நடக்கும் என்று பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் காவிரி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது வழிமறைத்த வெண்ணிலா, என் புருஷனை மயக்கி திருமணம் செய்து விட்டாய். ஆனால், உங்களுடைய காண்ட்ராக்ட் திருமணமே முடிந்துவிட்டது. பணத்துக்காக இப்படி எல்லாம் செய்வாயா? மரியாதையாக விஜய்க்கு விவாகரத்து கொடுத்து விட்டு செல். நானும் விஜய்யும் கூடிய சீக்கிரமே கல்யாணம் செய்யப்போகிறோம் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். கூலாக காவிரி, விஜய் எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி. நீங்கள் எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் தான் கேட்கணும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் எதற்கு என்னிடம் பேசுகிறீர்கள் என்று பதில் சொல்லிவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயின் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவின் மாமா, நாளைக்கு உங்களுக்கு கோயிலில் கல்யாணம். வந்து விடுங்கள் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் கோபத்தில் விஜய் அவரை அடிக்கப் போகிறார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் தடுத்து விடுகிறார்கள். அவரும் பயந்து அங்கிருந்து ஒடி விடுகிறார். இன்னொரு பக்கம் வெண்ணிலா, காவிரியின் வீட்டிற்கு சென்று ரொம்ப மோசமாக அவருடைய குடும்பத்தையும், காவிரியையும் பற்றி பேசுகிறார். இதை தாங்கிக் கொள்ளாமல் காவிரியின் வீட்டில் உள்ளவர்களும் வெண்ணிலாவை திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது வெண்ணிலா, நாளை என் திருமணத்தில் நீங்கள் ஏதாவது பிரச்சனை செய்தாள் மொத்த குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவிரி குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசுகிறார்கள். இதனால் கோபப்பட்ட காவிரியின் அம்மா விஜய்க்கு போன் செய்து வெண்ணிலா வீட்டில் வந்து செய்த ரகளை எல்லாம் சொல்கிறார். அதோடு நீங்கள் காவிரிக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று திட்டி விட்டு ஃபோனை வைத்து விடுகிறார். விஜய்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை, ரொம்ப கஷ்டப்படுகிறார். இன்னொரு பக்கம் காவிரி தன்னுடைய அப்பளம் பிசினஸில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full