காவிரி-விஜயை சேர்த்து வைத்த வெண்ணிலா, கங்கா அம்மா என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் குமரனிடம் காவிரி, நான் பசுபதியை பார்க்க வேண்டும். அதேபோல் நான் கொடைக்கானல் போகலாம் என்று இருக்கிறேன். நீங்கள் தான் அம்மாவிடம் பேசணும் என்று சொன்னார். அதற்குப்பின் தன்னுடைய அம்மாவிடம் காவிரி, எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை கொடைக்கானல் போகிறேன் என்று சொன்னார். ஆரம்பத்தில் காவிரியின் அம்மா தயங்கினாலும் அதற்கு பின் ஒத்துக் கொண்டார். பின் குமரன், காவிரி இருவருமே ஜெயிலுக்கு சென்று பசுபதியை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது பசுபதி, இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட்டார். பதிலுக்கு காவிரியுமே சவால் விட்டார்.
காவிரி-கங்கா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, பசுபதியை பார்த்த விஷயத்தை சொன்னார். உடனே கங்கா, விஜய் பற்றி அம்மாவிடம் பேசலாம். நீயும் விஜயும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் சென்றார். ஆனால், காவிரி அதை பற்றி கண்டுகொள்ளவில்லை. அப்போது விஜய் போன் பண்ணி கொண்டே இருந்தார். ஆனால், காவிரி போன் எடுக்கவே இல்லை. அதற்குப்பின் குமரன்- கங்கா இருவரும் காவேரி, விஜய் இருவரும் சேர்த்து வைப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் விஜய், காவிரி போன் எடுக்காததால் ரொம்பவே டென்ஷனாக இருந்தார்.
மகாநதி:
இன்னொரு பக்கம் நிவின், யமுனாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ஆனால், யமுனா போக முடியாது என்று சண்டை போட, கோபத்தில் நிவின், யமுனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். அந்த சமயம் வந்த குமரன், யமுனாவை பிடித்து எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்? என்று கேட்டார். அப்போது நடந்த எல்லாவற்றையும் நிவின், குமரனிடம் சொன்னார். பின் குமரன், யமுனாவை உள்ளே அனுப்பிவிட்டு நிவினுக்கு அறிவுரை சொன்னார். அந்த சமயம் பார்த்து குமரனுக்கு போன் செய்த விஜய், காவேரி எங்கே என்று கேட்டார். அப்போது குமரன், காவிரி கொடைக்கானலுக்கு கிளம்பி இருப்பாள். உங்களுக்கு தெரியாதா? என்று சொல்ல, விஜய் ரொம்பவே ஷாக் ஆனார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அஜய்யின் அப்பா, அம்மா இருவருமே விஜயின் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்கள், தாத்தா பாட்டி இடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், விஜயின் தாத்தா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். பஸ் ஸ்டாண்டில் காவிரி இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜய் வந்தார். விஜய்யை பார்த்தவுடன் என்ன சொல்வது என்று தெரியாமல் காவிரி அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
சீரியல் ட்ராக்:
உடனே விஜய், பாய் சொல்லிவிட்டு கிளம்பு. வேறொரு புது வாழ்க்கையை ஆரம்பித்துக்கொள். என்னை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க என் குழந்தை மீது சத்தியம் பண்ணி இருக்கிறாய். எப்படி உன்னால் இதை செய்ய முடிந்தது என்று கேட்டவுடன் காவிரிக்கு ஒண்ணுமே புரியவில்லை. அப்போது அங்கு வெண்ணிலா வந்தார். உடனே விஜய், நான் குழப்பத்தில் இருந்தே போது வெண்ணிலா நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபத்தில் விஜய், காவிரியை திட்டி அடிக்க போகிறார். உடனே தடுத்து நிறுத்திய வெண்ணிலா, நான் விஜயின் மீது வைத்திருந்த காதலை விட நீ விஜய் மீது வைத்திருந்த காதல் தான் உண்மையானது. நீ எனக்காக விஜயை விட்டுக்கொடுத்தாய். ஆனால், ஊரை விட்டு கிளம்ப மாட்டாய் என்று நினைத்தேன். ஆனால், நீ அதையும் செய்தார். நான் உங்கள் இருவரையும் பிரிக்க மாட்டேன். நீங்கள் ரெண்டு பேருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் கேட்டு காவிரிக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. பின் வெண்ணிலா, விஜய்- காவேரி இருவரையும் சேர்த்து வைத்து விட்டு தன்னுடைய மாமாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரியை பார்த்து அவருடைய அம்மா ஷாக் ஆகினார். காவிரி எனக்கு மனசு சரியாகிவிட்டது என்று ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். மறுநாள் காலையில் காவிரியின் வீட்டிற்கு விஜய் வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது