கோர்ட்டில் வெண்ணிலா சொன்ன விஷயம், விஜய் விடுதலை ஆனாரா? விறுவிறுப்பில் மகாநதி

By subhashini · 22/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் பசுபதியை மண்டையில் அடித்து கீழே தள்ளுகிறார் நிவின். உடனே அங்கிருந்த பசுபதி ஆட்கள் நிவினை கட்டி போட்டு விட்டார்கள். இருந்தாலுமே கயிறை அறுத்து அறுத்துவிட்டு ராகினியின் கழுத்தில் கத்தியை வைத்து பசுபதியை மிரட்டினார் நிவின். இன்னொரு பக்கம் குமரன், பசுபதி ஆட்கள் எல்லாம் அடித்து விட்டு வெண்ணிலாவின் மாமாவை காப்பாற்றுகிறார். அதோடு வெண்ணிலாவுக்கு இருக்கும் ஆபத்தை பற்றியும் எடுத்து சொல்வதால் வெண்ணிலா மாமா உண்மையை கோர்ட்டில் சொல்வதற்காக கிளம்பினார்.

காவேரி, போலீஸ் உன்னை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் எண்ணமே இல்லை. பசுபதி ஆட்களும் உன்னை கொல்ல காத்துக் கொண்டிருந்தார்கள். என்னை நம்பு நான் உன்னை அழைத்து செல்கிறேன் என்று சொன்னார். இதனால் வெண்ணிலாவுமே காவிரியின் பேச்சை கேட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் கோர்ட்டுக்கு விஜய்யை அழைத்து வந்தார்கள். அப்போது விஜய்யை பார்த்த தாத்தா, பாட்டி ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார்கள். கோர்ட்டில் விஜயின் எதிர் தரப்பு வக்கீல், விஜய் கிடைக்கவில்லை என்றால் வெண்ணிலா தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசிய வீடியோவை காண்பித்தார்.

மகாநதி

விஜய் தரப்பு வக்கீல், விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று வெண்ணிலா சொன்ன விஷயத்தை காண்பித்தார்கள். இரு தரப்பில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் காவேரி வெண்ணிலாவை அழைத்து வருவதை பசுபதி ஆட்கள் பார்த்துவிட்டு துரத்தினார்கள். காவிரி, வெண்ணிலா இருவருமே தப்பித்து ஓடினார்கள். ஒரு வழியாக பசுபதியின் ஆட்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு காவிரியை வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்தார். கோர்ட்டிலுமே விஜய் பக்கம் நிரூபிக்க ஆதாரம் வேண்டும் என்று சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் பசுபதியை விஜய், குமரன், நிவின் மூவருமை அடித்த வீடியோவை சமர்ப்பித்தார்கள். விஜய்க்கு எதிராகவே ஆதாரம் எல்லாம் இருந்தது. அதற்குப்பின் கோர்ட்டுக்கு வந்த நிவின், பசுபதியை நான் கோர்ட்டுக்கு தான் அழைத்து வந்தேன். ராகினி டிராமா போட்டு தப்பித்து விட்டார்கள் என்றார். வெண்ணிலா சுயநினைவுக்கு வந்தாரா? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள். பின் குமரன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவரும் வெண்ணிலாவின் மாமாவை அழைத்து வர முடியவில்லை என்று புலம்பி இருந்தார். என்ன செய்வதென்று புரியாமல் விஜய் தவித்து கொண்டு இருந்தார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு வந்த குமரன், நான் வெண்ணிலாவின் மாமாவை காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்தேன். ஆனால், அங்கு பசுபதி நாட்கள் என்னை அடித்து விட்டு வெண்ணிலாவின் மாமாவை மீண்டும் கடத்தி சென்று விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனால், குமரன் சொன்னதை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாமே விஜய்க்கு எதிராகவே இருக்கிறது. அந்த சமயம் பார்த்து காவேரி, வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார். அப்போது வெண்ணிலா, நான் தற்கொலை செய்யவில்லை.

சீரியல் ட்ராக்:

என்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டது பசுபதி தான். விஜய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெய்து விஜயை விடுதலை செய்யுங்கள் என்று எல்லாம் நடந்த எல்லா உண்மையை சொல்கிறார். இதனால் நீதிபதி விஜயை விடுதலை செய்கிறது. அதோடு பசுபதியை கைது செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவு போடுகிறார்கள். இதனால் எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள். பின் வீட்டிற்கு விஜயை அழைத்து வந்து எல்லோருமே ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். காவேரி, விஜயை விட்டு போவதை நினைத்து மனதுக்குள்ளே வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full