விஜயை திருமணம் செய்து கொள்ள வெண்ணிலா போடும் சவால், காவிரி சொன்ன வார்த்தை - மகாநதி

By subhashini · 11/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் மகாநதி சீரியலில் சூழ்நிலைக்காக விஜய்- காவிரி இருவரும் ஓரு வருட காண்ட்ராக்டில் திருமணம் செய்து கொண்டார்கள். இது வீட்டில் யாருக்கும் தெரியாது. பின் நாளடைவில் இருவருமே காதலிக்க தொடங்கி விட்டார்கள். ஆனால், இதை அவர்கள் இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் தன்னுடைய தங்கை நர்மதா காதலுக்காக நிவீனை எப்படியோ சம்மதிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார் காவிரி. ஆனால், நிவீனுக்கு இதில் சம்மதம் இல்லை. வற்புறுத்தினால் தான் இந்த கல்யாணம் செய்து கொண்டார்.

இன்னொரு பக்கம் காவிரி-விஜய்யை பழிவாங்க அவருடைய தம்பி, ராகினி இருவரும் விஜயின் காதலி வெண்ணிலாவை தேடி அலைந்து இருந்தார்கள். பின் காவிரி-விஜய் இருவரும் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை வாழ தொடங்கி விட்டார்கள். அப்போது வெண்ணிலா மீண்டும் வருகிறார். இதனால் விஜய்-காவிரி இருவருக்கும் இடையே ப்ரச்சனை வருகிறது. அதோடு இவர்கள் காண்ட்ராக்ட் திருமணம் தெரிந்தவுடன் காவிரியை, அவர் அம்மா வீட்டில் அழைத்து சென்று விட்டார்கள்.

மகாநதி சீரியல்:


மேலும், காவிரி-விஜய் இருவரும் காதலிக்கிறார்கள். வெண்ணிலாவுக்கு பழைய நினைவுகள் வந்து விஜயை காதலிக்கிறார். விஜய், வெண்ணிலாவிடம் காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் அவர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் காவிரி கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயம் நிவினுக்கு தெரிந்தது. ஆனால், காவிரி சொல்லக்கூடாது என்று சொல்கிறார். பின் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்ததில் இருந்து விஜய்யை பிடிக்க முடியவில்லை.

நேற்று எபிசோட்:

சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். பின் அவர் பார்த்து பார்த்து தன்னுடைய மனைவியை கவனித்துக் இருவருக்கும் இடையே காதலும் அன்பும் அதிகமானது. இன்னொரு பக்கம் வெண்ணிலாவின் மனதை மாற்றி காவிரி, விஜயை பிரிக்க ஒரு கும்பலை சதி தீட்டுகிறது. பின் ஓரு நாள் முழுவதும் காவிரி-விஜய் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். காவிரிக்கு வீட்டிற்கு செல்ல மனமே இல்லை. இருந்துமே வேறு வழி இல்லாமல் தன்னுடைய மனைவியை அனுப்பி வைத்தார் விஜய்.

சீரியல் ட்ராக்:

விஜய், நிவீனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது விஜய், காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி நன்றி சொன்னார். உடனே நிவின், காவிரி தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்றார். நீங்கள் இப்படி இருப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்று நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். பின் விஜய், நிவினை கட்டி பிடித்து இருவருமே தங்களுடைய பழைய பிரச்சினைகளை மறந்து விட்டார்கள். பின் வீட்டில் விஜய், காவிரியுடன் இருந்த நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். பின் அவர் காவிரியை வர சொன்னார். காவிரியும் விஜய் பார்க்க வந்தார். அப்போது இருவருமே ரொம்ப எமோஷனாக தங்களுடைய குழந்தையை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=EwEAVSKDW9c

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் காவேரி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது வழி மறுத்த வெண்ணிலா, என்னை நீ தான் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தாயாமே, நீங்கள் இரண்டு பேருமே அக்ரிமென்டில் தானே திருமணம் செய்தீர்கள். அது முடிந்து விட்டது. விஜய்க்கு விவாகரத்து கொடுத்துவிட்டு செல். நானும் விஜயும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று பேசுகிறார். உடனே காவிரி, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. விஜய் சம்மதித்தால் கல்யாணம் செய்து கொள் என்கிறார். கண்டிப்பாக நாளை எங்களுக்கு திருமணம் நடக்கும் என்று வெண்ணிலா சொல்கிறார். அதற்கு காவேரி, அவ்வளவு நம்பிக்கை இருக்கும் போது என்னிடம் எதற்கு பேசுகிறாய் என்று நக்கலாக பதில் சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full